Tuesday, April 24, 2012

இப்படியும் வாழ்க்கை உண்டு

உறக்கம் கலைக்க யாரும் இல்லை எனினும்
ஒவ்வொரு நாளும் இரவுகள் விடியும்.
எப்படியும் ஏற்பட்டுவிடும்,
தேநீர் தயாரிக்கையில் ஒன்றிரண்டு தீக்காயங்கள்!

வழக்கம் போலவே
எனக்கான கடிதங்கள் ஏதுமின்றி
வாசல் தாண்டி போவான் தபால்காரன்.

எடுத்து பரிமாற யாருமன்றி
அவசரமாய் அள்ளி உண்ணும்போது
அம்மாவின் ஞாபகம் ஏனோ தோன்றும்.

அலுவலக நேரங்களில் நண்பர்களிடம்
எத்தனை சிரித்துப்பேசினாலும்..
அத்தனயும் பொய்யென்றே
உள்மனம் உரைக்கும் .

சூரியன் மெல்லமாய் மறயத்தொடங்கும்.
வரவேற்க யாரும் இருப்பதில்லை என்றாலும்
பூட்டிய வீடு நோக்கி கால்கள் போகும்.

இருள் பரவிய அடர்ந்த இரவில்...
நிலவின் வெளிச்சத்தில்
வாழ்க்கை என்பதே புதிராய் விளங்கும்..

நினைத்து பார்க்க நினைவுகளில்லை...
உறங்கிப் போனால் கனவுகளுமில்லை
எனும்போது..

ஒரு பெருமழைக்கான ஆரம்பமாய்
விழத் தொடங்கும் தூறல் போல...
அடிமனதில் ஓர் விசும்பல் தொடங்கும்.....


ஒவையே கொடிது கொடிது
இளமையில் தனிமை கொடிது...

Wednesday, November 23, 2011

கொலைவெறி

ஒய் திஸ் கொலைவெறி பாட்டு கண்ணு மண்ணு தெரியாம ஹிட்ஸ் அடிச்சிட்டு இருக்கு
ட்விட்டர்ல லேட்டஸ்ட் Trendsla டாப்பு;
facebookla ஒரு இந்திகாரன் விடாம எல்லா ஸ்டேடஸ் மெசேஜ் இதுதான் .
youtubela நேத்து  1,394,256 views , இன்னைக்கு மதியம் 1,929,792 views ;
ரா ஒன் படத்துக்கு ஷாருக்ஹான் பண்ணின விளம்பரத்துல ஒரு percent கூட இவுங்க பண்ணல ஆனா 4 நாள்ல இருபது லட்சம் ஹிட்டு !
டைம்ஸ் ஆப் இந்திய , ரெடிப்ப் , ndtv நு பிச்சிகிட்டு போகுது.,
ரசனை என்ன மாதிரின்னு ஒன்னும் புரியல...


Handula glass-u, glass-la scotch-u eyes-u full-aa tear-u
Empty life-u girl-u come-u life-u reverse gear-u !!!!





Update 1:
Its about 9:35pm now and the views has crossed 2 Million hits :O (2,066,307)
Front Page cover story in Hindu :O
http://www.thehindu.com/arts/cinema/article2650957.ece#.TsziGeAKsj0.facebook 

Update 2;
Its about 3:41pm the next day and the hits has crossed : 2,866,584 views [tough time for lady gaga]



Kolaveri Di: Tamil actor Dhanush's studio rendering of bathroom crooning becomes a global rage; It stood third in the global music list giving a tough time to Lady Gaga
http://economictimes.indiatimes.com/news/news-by-industry/media/entertainment-/entertainment/kolaveri-di-tamil-actor-dhanushs-studio-rendering-of-bathroom-crooning-becomes-a-global-rage/articleshow/10837167.cms?google_editors_picks=true

Kolaveri Dhokla launched in Gujarat as UN announces World Kolaveri Day
http://www.fakingnews.com/2011/11/kolaveri-dhokla-launched-in-gujarat-as-un-announces-world-kolaveri-day/

Kolaveri lessons for marketers
http://www.livemint.com/2011/11/23173147/Views--Kolaveri-lessons-for-m.html?h=A1

After two days number of views : 5,438,921

இன்னைக்கு தேதி 11 -12 -2011 ; youtubela கொலைவெறி ஹிட்ஸ் : 20,341,650  

Sunday, November 6, 2011

வேலுப்பிள்ளை பிரபாகரன்



பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

நன்றி விகடன்.

Saturday, July 16, 2011

கடவுளின் பாலினம்

அண்ணன் குழந்தை, 20 மாதம் ஆகிறது. செல்ல மொழிப் பேசி அன்ன நடை பயின்றுவருகிறது.
கடந்த மாதம் முழுவதம் அலுவல், எல்லா வார நாட்களும் விடுமுறை நாட்களுமாக தொடர்ந்து ஒரு 25 நாள் வேலை. பொதுவாக இது போல் இல்லை எனினும் கணினி துறையில் எப்போ என்னவென்று எதுவும் சொல்வதற்கில்லை. இந்த இடைவேளைக்கு பிறகு திருப்பூர் சென்றிருந்தேன் வழக்கம்போல!

அள்ளி அணைத்த பேரனிடம்;
அம்மா - சச்சு யாரு இது?
குட்டி - சித்த்த்த்தா...............
அம்மா - பெங்களுருவிலிருந்து எப்ப வந்தீங்க கேளு;
குட்டி - கட்டை விரல் உயர்த்தி கை அசைத்து கேட்டது பெண்கு எப்பப்....

படர்ந்த அன்றைய நாளில் மாலை நேரம்  குழந்தை எதையோ செய்துவிட நானும் குரல் உயர்த்தி போலி கோபம் கொண்டேன். வரவேற்பறையில் என்னோடு இருந்தவன் மெல்ல எழுந்து எதோ சிந்தித்தவாறு இரு கைகள் உருட்டி கொண்டே மெல்ல அம்மாவை தேடி நடையிட சில நொடிகள் என்னை பார்பதுமாய் நடப்பதுமாய் சுவர் வரை சென்று சற்றே உருவம் மறைத்து பின் வெளி வந்து அகண்ட கை விரல் எனை நோக்கி "மூமூந்ஜ்ஜ்ஜீஈ[மூஞ்சி]" எனக் கூறி ஆண் கடவுள் காட்டினான்.

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடந்த சனிக்கிழமை மதியம் ஒரு பனிரெண்டு மணி அளவில் பெங்களூரில் வீடு பக்கத்தில் இருக்கும் ஒரு ATM இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றிருந்தேன். நல்ல கூட்டம். மொத்த கூட்டமும் வங்கி வேலைக்கு வந்திருந்தவர்கள்.

ATM இல் ஒரு நபர் இரு குழந்தைகள். அண்ணனும் தங்கையும்.

பெண் குழந்தை ஒவ்வொரு பரிவர்த்தனை தாளாக வெளி இழுத்து கிழித்துகொண்டிருந்தது, அண்ணன் வேண்டாமென்று துரத்த இரண்டும் எங்கோ ஓடிச் சென்றது. பின், முன்னிருந்தவர் நகர நானும் பணம் எடுக்கப் பணிந்தேன். சில நொடிகளில் சத்தத்துடன் ஓடி வந்த குழந்தைகள் என்னை எனக்கு முன் நின்றவர் என எண்ணி சுற்றி கொண்டிருக்க பெண் குழந்தை என் மேல் தாவி ஏறியது. அள்ளிக்கொண்டு பணத்துடன் வெளி வந்து குழந்தை முகம் பார்க்க தானும் என் செய்வதறியாது எனை பார்த்தது, அப்பொழுது தன் அப்பா வர நானும் கீழே இறக்கி விட ஓடிச் சென்று அவர் கால்களுக்கு பின்னல் ஒளிந்துகொண்டது.

என் பத்து விரல்களையும் குஷ்டம் போல் மடக்கி இரு கைகளையும் காதோடு வைத்து சற்றே முகம் மாற்றி உற்ர்ர்ர்  என்க முழவதுமாய் தன்னை மறைத்துகொண்டது. அந்த ஆனந்த மனிதரைப் பார்த்து சற்ற சிரித்து நகர்ந்தேன்.
வெளி நின்ற இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து பயணப்பட ஆயத்தமாகி ஒரு முறை திரும்பி பார்க்க, படியில் தனியே நின்று எனை பார்த்து கொண்டிருத்த குழந்தை "தேங்க்யு அங்கிள் " என சொல்லிச்சிரிக்க அன்று பெண் கடவுளும் கண்டேன்!!

Sunday, June 26, 2011

இதுதான் மனதோ

ஈரோட்டு சன் மியூசிக் தொகுப்பாளர் சூர்யா தமிழ் மேல் மரியாதை எற்படுதிக்கொண்டிருக்கிறார் !!

அவள் இல்லாத சோகத்தை
அவள் வீட்டு ரோஜா
வாடி உணர்த்துகிறது!!!

அன்பு அம்மாவிற்கும் அவர் தங்கைக்கும் இதோ பாடல்...
அருமையான வரிகள்!! ---நன்றி சூர்யா.,
[பாடல் : தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் வைத்தது.........]

------------------------------------------------------------------------------------------------------------------
பாலா எனும் மகாக் கலைஞன் மதிக்கும் சக மனிதனாக வளர்ந்து நிற்கும் அன்பு சூர்யாவிற்கும் அகரத்திர்க்கும் கோடானு நன்றிகள்!!!
இன்றைய உலகில் ஆண்கள் காதலித்து கண்ணீர்விட விரும்பும் இரு மனிதர்கள் ரஹ்மான் மற்றும் சூர்யா.,
வாழ்க நீவீர் வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
நலமுடன் வாழியவே!!!
------------------------------------------------------------------------------------------------------------------

எனது ஒலிப்பேழையில் இளையராஜாவின்..............................

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

இரவும் தமிழும் இளையராஜாவும் வாழ்க.........

------------------------------------------------------------------------------------------------------------------

மகள் சிறையில்
தகத்தகாய கதிரவனும் உடன் சிறையில்...
அப்பாவின் சிரமம், மகள் சிறையில் இருப்பதா இல்லை கதிரவனோடு இருப்பதா??????
சிரமப்படும் தந்தையே...
ஜாமீன் வழக்கில் காட்டுற அக்கறையை என் சமச்சீர் கல்வி வழக்கில் காட்டுவதில்லை???????????

------------------------------------------------------------------------------------------------------------------

கச்சதீவை மீட்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதே என் மீது விமர்சனக் கணைகள் வீசத்தான்.. - கருணாநிதி!!
உலகின் மொத்த சூன்யமும் உருவான ஒரு பெண்ணால் தான் உங்கள் மொத்த புகழ், சொந்தம், அன்பு, உறவு, அமைதி, பாசம், உயிர் போகும் என இறந்த ஆன்மாக்கள் முடிவுரை எழுதி விட நீங்கள் எங்க திருந்துவது.,
நானும் காத்திருக்கிறேன்.......


மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது

------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, December 30, 2010

2011

இவன் எழுதியதை அவனோ,
அவன் எழுதியதை இவனோ,
வாழ்த்துச்செய்தியாக கைபேசிகள் நாளை பரிமாறிக்கொள்ளும்;

குடிகாரர்களின் கூடாரங்கள் கும்மாளமிடும்,
ஓசோன் ஓட்டைகள் புகைத்தலால் நிரப்பிக்கொள்ளும்,
பல கர்பங்களுக்கான ஒத்திகைகள் அரங்கேறும்;

உல்லாச கிழ ஆளுநர்கள்,
குழந்தை பாலியல் வல்லுறுக்கள்,
லட்சம் கோடி ஊழல்,
கல்மாடியின் கபடி,
மகிந்த ஆட்சி,
பாசத்தலைவனுக்கு பாராட்டு;
தொலைக்காட்சிகளும் சென்ற ஆண்டை சற்றே திரும்பிப்பார்க்கும்;

எது வந்திட எனக்கென்ன,
என் குடும்பம் சுகம்;
உன் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்;
நானே விடுத்தேன் முதல் வாழ்த்தை இன்றே,
நாளைய குறுஞ்செய்தி விலை அதிகம்!!!

Tuesday, September 7, 2010

காலஹஸ்தி

டேய் அம்மா காளஹஸ்திக்கு போகச் சொல்லி சும்மா நச்ச்சரிக்கராங்கடா என எப்பொழுதும்போல அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம் அன்று.,
வரும் வாரம் ரம்ஜான் நோன்புக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, மூணுநாள் லீவுக்கு ஊருக்கு போய்டுவோம் அதனால இந்த வாரம் காலஹஸ்தி போய்டலாம் நானும் வரேன்னு நண்பர்கள் சொல்ல பயணத்துக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டது.,




கால சர்ப்ப தோஷத்திற்கு சனிக்கிழமை ராகு காலம் உகந்தது என இணையதள தேடல்கள் ஒவ்வொன்றும் முடிவுரை கூற சனிக்கிழமை காலை 9-10:30 ராகு காலத்திற்குள் அங்கு சென்று விட முடிவாகியது. சதீஸ்க்கு போன் பண்ணி "டேய் சனிக்கிழமை காலஹஸ்தி போகறதுக்கு கார் வேணும், உனக்கு என்ன பிளான்" 


'நான் ஊருக்கு போறேன் எனக்கு கோகுலாஷ்டமிக்கு வியாழக்கிழமை லீவ், வெள்ளிக்கிழமை நான் லீவ் போட்டுட்டு நாலு நாள் போறேன். புதன்கிழமை சாயந்தரம் வந்து வண்டிய வாங்கிக்கோ"
[ஐந்து நிமிட உரையாடல், நீள் மேல் விசாரிக்காமல் வந்து வண்டி வாங்கிகோன்னு  சொல்ற நண்பர்கள் இருக்கும் பொழுது இந்த தோஷம் என்ன பண்ணிடபோகுதுன்னு உள்ளூர ஒரு நெனப்பு வேற., ]
எப்படிப் போவது எந்த வழி நல்லது, பக்கம் என எல்லா விசாரிப்புகளும் முடிந்து சனிக்கிழமை காலை 3:30 மணிக்கு பயணம் ஆரம்பமானது.


தங்கியிருக்கும் அறையிலிருந்து krpuram வழியாக ஹோசக்கோட்டை- கோலார் - பலமனேர் - சித்தூர் - திருப்பதி வழியாக காலஹஸ்தி வந்தடைந்தோம்., ஐந்து மணி நேரப் பயணம். 8:30 மணிக்கு கோயில் முன்பு ஆஜர்., கர்நாடகச் சாலைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் சூப்பர். ஆந்திரா மாநில சாலைகள் அழகு. தமிழ்நாட்டில் இருக்கும் நான்கு வழிச் சாலைகள் போல் இல்லை எனினும் மேடு பள்ளம் இல்லாத இரு வழிப் பாதை, மலைகளினூடே சில நேரம், சாணி தெளித்து கோலம் போடும் கிராமத்து குடும்பங்கள், தாய் கோழியுடன் இறை தேடிக்கொண்டிருந்த குட்டிகள், சில்லென்ற மழைச சாரல் என வழி நெடுகும் நிறைய கவிதைகள் வியாபித்திருந்தது!


கோவில் முழுவதும் தெலுங்கிலும் தமிழிலும் பெயர் பலகைகள். இருக்கும் அனைவரும் நம்மை எந்த மொழி என்று விசாரித்து பின் நம் மொழி பேசுகிறார்கள்., கால சர்ப்ப தோஷ நிவாரண பூஜைக்கு தொண்ணூறு சதவிதம் மக்கள் வந்திருந்தனர். கொஞ்சம் கூட்டம்.


Indian rupee250 - கோவிலிக்கு வெளிய ஒரு பொது மண்டபத்தில் பூஜை. கூட்டத்தை பொருத்து சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேர வரிசை.
Indian rupee600 - கோவிலுக்கு வெளியே மற்றொரு மண்டபம். ஒரு பத்து சதவித கூட்டம் குறைந்திருக்கக் கூடும். 
Indian rupee1000 - கோவிலுக்குள்ளே முருகர் சிலை முன்பு பூஜை மற்றும் பரிகாரம். ஒரு மணி நேரம்.
Indian rupee1500 - கோவிலுக்குள்ளே மூலவர் முன்பு ஸ்பெஷல் பூஜை., இவர்களுக்கு எல்லா மரியாதையும் உண்டு.,


எல்லா பூஜைகளும் மண்டபத்தில் தான்., ஐயர் மைக்கில் சொல்ல அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்., ஆனால் தட்சிணை என்னும் பெயரில் போவோர் வருவோர் பணம் கேட்பார்கள் கொஞ்சம் உஷார்., விளக்கு பற்ற வைக்கும் பெண்மணி, குப்பைகள் பெருக்குவோர், கோவிலை சுற்றி காண்பிப்பவர், ஐயர், கோவில் பூசாரி என கிட்டத்தட்ட எல்லாரும் வாய்க்கு வந்ததை கேட்க கொஞ்சம் கோபமும் இருந்தது.


எல்லாம் முடிந்து மதிய உணவு கௌரி சங்கரில் முடித்து வந்த வழியிலயே திரும்பினோம்., ஏழு மணி நேரப் பயணம். ஆந்திர மாநில வழி நெடுகிலும் பழ விற்பனை படு ஜோர். தர்பூசணி, கொய்யா, இளநீர், நெகாப்பழம், சீதாப்பழம் என அனைத்தும் அன்று பரித்தவைகள். விலையும் கம்மி., காரில் போகும் நண்பர்கள் இவர்களிடம் பழம் வாங்கிச் செல்லுங்கள். என்ன ஏதென்று தெரியாமல் கோவிலில் ஆயிரங்களை இறைத்து கிடைக்காத புண்ணியம் இந்த கிராமாவாசிகள் நியாயமாக விற்கும் நல்ல பழங்களை வாங்குவதில் கிடைக்ககூடும். அன்று அவர்கள் நல்ல உணவருந்தக்கூடும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜ கோபுரம் இடிந்து விழுந்த அடையாலாம் கூட தெரியவில்லை. அது எங்கு இருந்தது எப்பொழுது கட்டப் போகிறார்கள் என எதுவும் தெரியவில்லை.,

Tuesday, August 17, 2010

எவன் திருட்டு பயல்.,

ஆசையாய் ஒரு மடிக்கணினி வாங்கியிருந்தேன். டெல் கம்பனியின் ஸ்டுடியோ ரகம். ஒரு வருடமாக சேர்த்து வைத்திருந்த புகைப்படங்கள் , பாடல்கள், படங்கள், கவிதைகள், விளையாட்டுகள், PDF கோப்புகள்,  அலுவலக கோப்புகள் என  சுமார் 200GB வரை மொத்தமாக களவு போயிற்று!!!

கடந்த ஞாயிறு காலை நோலேனின் இன்செப்சன் படம், முடித்த கையோடு மதிய உணவை கட்டிக்கொண்டு வீடு வந்து சேரும் பொழுது மணி சுமார் இரண்டு இருந்திருக்கும். வந்த முதல் பார்வையில் மடிக்கணினி இல்லை என்பது தெளிவாகியது., அருகில் இருப்பவர்கள், வீட்டு முதலாளி என எல்லோரிடமும் கேட்டு மொத்த வீதியும் குழுமிவிட்டது., அச்சச்சோ அது இது என ஆயிரம் எதிர் கேள்விகள், பல பரிதாபங்கள் சில விசாரணைகள்., எல்லா களேபரம் முடிந்து கையோடு அருகிலிருக்கும் மடிவாலா போலீஸ் ஸ்டேஷன்  சென்று நமது சீர்மிகு காவல்துறையிடம் முறையிட்டேன்.,

  • முதல் நாள் : என்னப்பா இது சண்டே ஈவினிங் வந்திருக்கீங்க ரைட்டர் இல்லையே! ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பின் வந்த பதில் இது.,
  • இரண்டாம் நாள் காலை : ஒரு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வந்த பதில் "கரண்ட் இல்லை போயிட்டு சாயந்தரம் வாப்பா"., வெறுப்புடன் அலுவலகம் சென்று பின் மாலை மீண்டும் ஒரு முறை போலீஸ் ஸ்டேஷன் முன்பு நான்., அதே பதில். இன்று போய் நாளை வா!!
  • மூன்றாம் நாள் : அடடா.. பிரிண்டர் வேலை செயலயே  - காலை போய் மாலை வா., 
  • மூன்றாம் நாள் மாலை : சப்-இன்ஸ்பெக்டர் இல்லை - இன்று போய் நாளை வா.,
  • நான்காம் நாள் : என்னது லேப்டாப் காணோமா!! ஏப்பா சண்டே வர்ல!!!!!!!!!! 
நல்லா இருங்கட மகராசனுகளானுட்டு வீடு வந்தேன்.,

மடிக்கணினி எடுத்துக்கொண்டு போனவன் திருடன்னா இந்த வெண்ண வெட்டிகள என்ன சொல்றது???? 

Airtel சேவையும் கடமை உணர்ச்சியும்ன்னு  வேறு ஒரு பதிவே போடலாம்., ஆளில்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்தரங்கற மாதிரி routerயும், phoneயும் எதுக்குடா வெச்சிருக்கீங்க எடுத்துட்டு போங்கடான்னா, இன்ன வரைக்கும் அது நடக்கல., ஒரு இருபது தடவை போன் பண்ணி எப்போ அடுத்த லேப்டாப் வாங்கறீங்க, மூணு மாசத்துக்கு ஜஸ்ட் முந்நூறு கட்டுங்க இந்த இணைப்பு உங்க பேர்லயே வெச்சிருக்கோம், உங்க நண்பரகளுக்கு மாத்தி விட்ருங்கன்னு கொன்னு கொலை எடுக்கராணுக.,

Indian Rupee symbol.svg853 கட்ட சொல்லி இப்போ இரு மெயில் வேற!!!

மக்களே ரொம்ப உஷாரா இருங்க., 

~~~~
சில வருடங்களுக்கு முன் இதே நோலனின் The Dark Knight படம் முடிந்து வீடு திரும்பும்பொழுது எனது சாம்சங் அலைபேசி மழையில் நனைந்து இப்போது அண்ணன் குழந்தைக்கு விளையாட்டு பொம்மையாக உள்ளது[பத்தாயிரம் கோவிந்தா]., இப்பொழுது நோலனின் இந்த படத்தால் மடிக்கணினிக்கு ஆப்பு[நாப்பத்தஞ்சாயிரம் ஸ்வாகா]., 
அம்மா "எம்மா தாமஸ்"  - நோலனுக்கு அடுத்த படத்துக்கு பணம் குடுக்காதீங்க. இங்க டௌசெர் கிளியிது., :)

Monday, July 12, 2010

மதராசபட்டினம்

டப்பாங்குத்து பிற மொழி படங்கள் தமிழாக்கம் செய்து பழக்கபட்டிருக்கிறோம். ஆனால் இந்த படம் டைட்டானிக் சாயல். உயிரே பாடலும் கொஞ்சம் நினைவலைகளில்.,
இதை தவிர்த்து நிச்சயம் இப்படம் ஒரு தரமான படைப்பு.
ஒரு முறையாவது பார்க்கவேண்டிய படம்.

Tuesday, April 20, 2010

தமிழன் என்று சொல்லடா, தலை வெட்கி சாவடா..

மனிதாபிமானம் என்ன விலை? கேட்கிறது காந்தி தேசம்!.


இந்தியா!, அஹிம்சை நாயகன் மகாத்மா காந்தியை தேசபிதாவாக கொண்ட நாடு. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மனிதாபிமானத்தை தன்னுடைய வாழ்வாக கொண்டிருந்த அன்னை தெரசா வாழ்ந்த நாடு.......
.......
.......
.......
படிக்கும் பொழுது நீங்கள் வாயால் சிரிப்பது தவறு!!!


81 வயதை அண்மித்த இலங்கை தமிழ் மூதாட்டி, ஈழத்தமிழ் போராட்ட தலைவரும் சுத்த வீரனுமான தமிழினத்தின் ஈடு இணையற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் நடு இரவில் வந்த விமானத்திலேயே மலேசியா திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்...  நடந்தேறியது நம் சிங்கார சென்னையில் தான்.,


பக்கவாத சிகிச்சைக்கு விசா கொண்டு வந்தவரிடம் உங்களுக்கு அனுமதி இல்லை என்று அன்போடும் பாசத்தோடும் டாட்டா சொல்லி திருப்பி அனுப்பி இருகின்றனர் நமது கடமை தவறா காவல் துறை..


பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையும், பார்வதி அம்மாவும் கடந்த 2003ஆம் ஆண்டுவரை திருச்சியில் இருந்தவர்கள். பிறகு இலங்கைக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு (ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது) மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டது. அதன்படி, தடை செய்யப்பட்டோர் பட்டியலில் அவர்களை மத்திய அரசு சேர்த்துவிட்டது.


கேள்வி???
யார் யாரெல்லாம் இந்தியா வரக்கூடாது என்கிற தடை பட்டியலில் பார்வதி அம்மாளின் பெயரும் இருக்கிறதென்றால், அந்தப் பட்டியலை ஒவ்வொரு நாட்டிலும் இயங்கிவரும் இந்திய அரசின் தூதரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமே? அந்தப் பட்டியலைக் கண்ட பிறகுதானே விசா வழங்கு அதிகாரி எந்த ஒரு நபருக்கும் விசா வழங்குவதா கூடாதா என்பதை முடிவு செய்யமுடியும்? அதுமட்டுமின்றி, விசா கோருபவரின் பெயர் பட்டியலில் இல்லாவிட்டாலும், அந்த நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அது குறித்து ஆலோசனை பெற்றுதானே விசா அளிப்பு அதிகாரி செயல்படுகிறார்? இதுதானே நடைமுறையாக இருந்துவருகிறது? பிறகு பட்டியில் இடம்பெற்றவருக்கு எப்படி விசா வழங்கப்பட்டது?


கேட்க ஆயிரம் கேள்விகளும் சபிக்க மொத்த ஆன்மாவும் கை கோர்த்து வருகிறது., புழுத்துப்போன அரசியில் ஆட்டமும் தொடங்கி விட்டது., தமிழினத் தலைவர் இது குறித்த கருத்தில் "பிரபாகரன் தாயார் திருப்பி அனுப்பப்பட அதிமுகவின் கடிதமே காரணம்" என் திருவாய் மலர்ந்திருக்கிறார். எதிர் கருத்துகளும் அமோகமாக இன்றோ நாளையோ 
வந்து சேரும். ஒன்றும் புதிதல்ல எங்களக்கு, ipl கிரிக்கெட், சுறா படம், நித்யானந்தா லீலை என பல பிரச்சனைகள் இடையே இந்த சாபக்கேடு ஒரு இடைஞ்சலே.,


கணவன் இழந்து, கால் இழந்து, நாடு இழந்து, மொழி கொண்டு வந்த என் அன்னை சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்காக தமிழனும் தமிழினமும் செத்து ஒழியட்டும். பாரதி கூற்றுப்படி தமிழ் இனிமேல் சாகவேண்டியதுமில்லை., ஒற்றுமையற்ற, துரோகிகளும் காட்டி கொடுப்பவர்களும் இருக்கும் இந்த இனம்  வாழ்ந்தாக வேண்டிய கட்டாயமுமில்லை.,


வந்தாரை வாழ வைத்த தமிழகமாம்....

Monday, April 19, 2010

வில்பூர் சற்குணம்

வில்பூர் சற்குணம் செய்யும் அலப்பரைகள் இங்கே.,


http://www.youtube.com/user/wilbursargunaraj#p/a/u/0/WgOfcRD505E

சுட்டியில் இடது பக்கம் இருக்கும் அத்தனையும் இவரது சொந்த படைப்புகள், பார்த்து, கேட்டு கண்டு மகிழுங்கள் .,
கூடிய விரைவில் தொலைகாட்சியில் இவர் வரக்கூடும்.,



இவரது பயணத்துக்கு நம் வாழ்த்துக்கள்.,

Friday, March 26, 2010

Deal or No Deal...

அலுவல் வேலையாக மீண்டும் அமெரிக்க வந்திருந்தேன்., நேற்றைய பொழுது சமையல் வேலையில் மும்முரமாக ஆழ்ந்திருகையில் தொலைகாட்சியில் ஒளிபரப்பான விளம்பரம் சற்றே என் கவனத்தை ஈர்த்தது..

"Deal or No Deal" - நிகழ்ச்சியின் பெயர்.

ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் கூட சுட படுமா என ஆச்சர்யமும் கொஞ்சம் ஆதங்கமுமே வியாபித்தது. ஒரு அங்குலம் கூட மாறாமல் நிகழ்ச்சியை தமிழ் நாட்டு மக்களுக்கு லவட்டி கொண்டு வந்துள்ளனர் - உங்கள் தொலைக்காட்சி., நிகழ்ச்சி நடத்துபவரின் முன் இருக்கும் ஒரு மேஜை முதல், பெட்டிகளை தூக்கிகொண்டு வரும் அழகிகள் (!!!) வரை அப்பட்டமான copy, xerox!!!

போன முறை அமெரிக்க வந்திருந்த பொழுது கடைசி ஒரு மாதம் சுமார் -20 டிகிரி குளிரிலேயே பொழுதை கழித்திருந்தேன்., ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர் காலம் ஏப்ரல் மாதம் வரை தொடரும்., இன்று மார்ச் 26 2010. இரவு முதல், காலை 10 மணி வரை -5 டிகிரி குளிரும் மதிய நேரத்தில் ஒரு 8-9 டிகிரி குளிரும் இருக்கிறது.. எந்த ஒரு வேலைக்கும் கண்டிப்பாக ஒரு வாகனம் வேண்டும், மூன்று அல்லது நான்கு துணிகள் உடுத்திக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம்., ஒரு வருடத்தில் ஏழு மாத காலம் பனிப்பொழிவும் கடும் குளிரும் கொண்டு விவசாயம் என்பது இந்த நாட்களில் ஒரு கனவாகவே இருக்கும் பட்சத்திலும் கடந்த பல நூற்றாண்டுகளுக்கும் இந்த நூற்றாண்டிலும் ஒரு வல்லாரசாக தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கும் அமெரிக்க மக்களக்கு நாம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்தே ஆகவேண்டும்.

இந்த சாதனை ஒரு பொழுதில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அயராத உழைப்பும், புதிய கண்டுபிடிப்புகளும் இவர்கள் பயணத்தை அழங்கரித்திருப்பினும் தான் கொண்ட கடமையில் அலட்சியம் செய்யாததே இவர்கள் வெற்றியாக நான் கருதுகிறேன். எந்த இடத்திலும் சூழ்நிலையிலும் "என் கடன் பனி செய்வதே" இவர்கள் தாரக மந்திரம்.,

ஒரு பத்து வருட காலம் முதன்மை தொலைகாட்சியாக தங்களை நிரூபித்து கொண்டவர்கள் கூட புதிய முயற்சிகள் செய்யாமல், ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு சாயம் பூசி கொடுக்கும் வேலை செய்யும் பட்சத்தில் எங்கிருந்து வரும் புதிய கண்டுபிடிப்புகள்?????

மூளை ஒவ்வொரு நாளும் மழுங்கடிக்கப்பட்டு கொண்டிருகிறது!!

இருக்கும் இடத்தில உணவு சமைத்தால் மட்டுமே சட்டி உடைகிறது, வெளியூரில் சமைத்தால் லட்டு கிடைக்கிறது என நொண்டி சாக்கு செய்யாமால், இருப்பதை கொண்டு புதியதை கண்டுபிடிப்போமாக! தேவைகள் மட்டுமே கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளதை சற்றே உற்று பார்க்க வேண்டும்! எந்த ஒரு தேவைக்கும் வேறு இடத்தில தேடாமல் நாமாக அதை உருவாக்க முனையும் பொழுது கண்டுபிடிப்புகள் சாமரம் வீசும்.

தொழில்நுட்ப துறையில் இருக்கும் கம்பெனிகளை பொதுவாக  Product மற்றும் Service based என் பெருவாரியாக பிரித்து பார்ப்பார்கள். இதில் Product என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவை [கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், McAfee, போன்ற கம்பெனிகள்], Service  கம்பெனிகள் பொதுவாக வேறொரு கம்பெனிக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைக்காரனே!
இந்தியாவில் இருக்கும் முதல் பத்து தொழில்நுட்ப கம்பனிகளில் ஒன்று கூட Product based இல்லை. நாம் வெறும் சேவை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம்..

இருக்கும் இடத்தை மேம்படுத்துவதிலும் கடமை தவறமால் இருந்திருந்தாலுமே முன்னேற்றமும், அண்டை வீட்டார் / மாநிலத்தார் / நாட்டார் இன் மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்க முடியும்.


..."Bad Girls Club" என்னும் ஒரு நிகழ்ச்சியும் நேற்று பார்த்தேன். கெட்ட வார்த்தைகளுக்கு இடையே கொஞ்சம் பேசவும் செய்திருந்தனர்.. A@@ hole, Fu@king Bit@ch போன்ற வார்த்தைகள் சர்வ சாதரணமாக பேசி கொண்டிருக்க அதனை தமிழாக்கம் செய்து பார்க்க அவ்வளவு நாற்றம் [மனம்]!! கடவுள் பாதி மிருகம் பாதி...