Sunday, June 26, 2011

இதுதான் மனதோ

ஈரோட்டு சன் மியூசிக் தொகுப்பாளர் சூர்யா தமிழ் மேல் மரியாதை எற்படுதிக்கொண்டிருக்கிறார் !!

அவள் இல்லாத சோகத்தை
அவள் வீட்டு ரோஜா
வாடி உணர்த்துகிறது!!!

அன்பு அம்மாவிற்கும் அவர் தங்கைக்கும் இதோ பாடல்...
அருமையான வரிகள்!! ---நன்றி சூர்யா.,
[பாடல் : தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை, அங்கத்தில் யார் வைத்தது.........]

------------------------------------------------------------------------------------------------------------------
பாலா எனும் மகாக் கலைஞன் மதிக்கும் சக மனிதனாக வளர்ந்து நிற்கும் அன்பு சூர்யாவிற்கும் அகரத்திர்க்கும் கோடானு நன்றிகள்!!!
இன்றைய உலகில் ஆண்கள் காதலித்து கண்ணீர்விட விரும்பும் இரு மனிதர்கள் ரஹ்மான் மற்றும் சூர்யா.,
வாழ்க நீவீர் வாழ்க
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
நலமுடன் வாழியவே!!!
------------------------------------------------------------------------------------------------------------------

எனது ஒலிப்பேழையில் இளையராஜாவின்..............................

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

இரவும் தமிழும் இளையராஜாவும் வாழ்க.........

Thursday, December 30, 2010

2011

இவன் எழுதியதை அவனோ,
அவன் எழுதியதை இவனோ,
வாழ்த்துச்செய்தியாக கைபேசிகள் நாளை பரிமாறிக்கொள்ளும்;

குடிகாரர்களின் கூடாரங்கள் கும்மாளமிடும்,
ஓசோன் ஓட்டைகள் புகைத்தலால் நிரப்பிக்கொள்ளும்,
பல கர்பங்களுக்கான ஒத்திகைகள் அரங்கேறும்;

உல்லாச கிழ ஆளுநர்கள்,
குழந்தை பாலியல் வல்லுறுக்கள்,
லட்சம் கோடி ஊழல்,
கல்மாடியின் கபடி,
மகிந்த ஆட்சி,
பாசத்தலைவனுக்கு பாராட்டு;
தொலைக்காட்சிகளும் சென்ற ஆண்டை சற்றே திரும்பிப்பார்க்கும்;

எது வந்திட எனக்கென்ன,
என் குடும்பம் சுகம்;
உன் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்;
நானே விடுத்தேன் முதல் வாழ்த்தை இன்றே,
நாளைய குறுஞ்செய்தி விலை அதிகம்!!!

Tuesday, September 7, 2010

காலஹஸ்தி

டேய் அம்மா காளஹஸ்திக்கு போகச் சொல்லி சும்மா நச்ச்சரிக்கராங்கடா என எப்பொழுதும்போல அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம் அன்று.,
வரும் வாரம் ரம்ஜான் நோன்புக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, மூணுநாள் லீவுக்கு ஊருக்கு போய்டுவோம் அதனால இந்த வாரம் காலஹஸ்தி போய்டலாம் நானும் வரேன்னு நண்பர்கள் சொல்ல பயணத்துக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டது.,




கால சர்ப்ப தோஷத்திற்கு சனிக்கிழமை ராகு காலம் உகந்தது என இணையதள தேடல்கள் ஒவ்வொன்றும் முடிவுரை கூற சனிக்கிழமை காலை 9-10:30 ராகு காலத்திற்குள் அங்கு சென்று விட முடிவாகியது. சதீஸ்க்கு போன் பண்ணி "டேய் சனிக்கிழமை காலஹஸ்தி போகறதுக்கு கார் வேணும், உனக்கு என்ன பிளான்" 


'நான் ஊருக்கு போறேன் எனக்கு கோகுலாஷ்டமிக்கு வியாழக்கிழமை லீவ், வெள்ளிக்கிழமை நான் லீவ் போட்டுட்டு நாலு நாள் போறேன். புதன்கிழமை சாயந்தரம் வந்து வண்டிய வாங்கிக்கோ"
[ஐந்து நிமிட உரையாடல், நீள் மேல் விசாரிக்காமல் வந்து வண்டி வாங்கிகோன்னு  சொல்ற நண்பர்கள் இருக்கும் பொழுது இந்த தோஷம் என்ன பண்ணிடபோகுதுன்னு உள்ளூர ஒரு நெனப்பு வேற., ]
எப்படிப் போவது எந்த வழி நல்லது, பக்கம் என எல்லா விசாரிப்புகளும் முடிந்து சனிக்கிழமை காலை 3:30 மணிக்கு பயணம் ஆரம்பமானது.


தங்கியிருக்கும் அறையிலிருந்து krpuram வழியாக ஹோசக்கோட்டை- கோலார் - பலமனேர் - சித்தூர் - திருப்பதி வழியாக காலஹஸ்தி வந்தடைந்தோம்., ஐந்து மணி நேரப் பயணம். 8:30 மணிக்கு கோயில் முன்பு ஆஜர்., கர்நாடகச் சாலைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் சூப்பர். ஆந்திரா மாநில சாலைகள் அழகு. தமிழ்நாட்டில் இருக்கும் நான்கு வழிச் சாலைகள் போல் இல்லை எனினும் மேடு பள்ளம் இல்லாத இரு வழிப் பாதை, மலைகளினூடே சில நேரம், சாணி தெளித்து கோலம் போடும் கிராமத்து குடும்பங்கள், தாய் கோழியுடன் இறை தேடிக்கொண்டிருந்த குட்டிகள், சில்லென்ற மழைச சாரல் என வழி நெடுகும் நிறைய கவிதைகள் வியாபித்திருந்தது!


கோவில் முழுவதும் தெலுங்கிலும் தமிழிலும் பெயர் பலகைகள். இருக்கும் அனைவரும் நம்மை எந்த மொழி என்று விசாரித்து பின் நம் மொழி பேசுகிறார்கள்., கால சர்ப்ப தோஷ நிவாரண பூஜைக்கு தொண்ணூறு சதவிதம் மக்கள் வந்திருந்தனர். கொஞ்சம் கூட்டம்.


Indian rupee250 - கோவிலிக்கு வெளிய ஒரு பொது மண்டபத்தில் பூஜை. கூட்டத்தை பொருத்து சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேர வரிசை.
Indian rupee600 - கோவிலுக்கு வெளியே மற்றொரு மண்டபம். ஒரு பத்து சதவித கூட்டம் குறைந்திருக்கக் கூடும். 
Indian rupee1000 - கோவிலுக்குள்ளே முருகர் சிலை முன்பு பூஜை மற்றும் பரிகாரம். ஒரு மணி நேரம்.
Indian rupee1500 - கோவிலுக்குள்ளே மூலவர் முன்பு ஸ்பெஷல் பூஜை., இவர்களுக்கு எல்லா மரியாதையும் உண்டு.,


எல்லா பூஜைகளும் மண்டபத்தில் தான்., ஐயர் மைக்கில் சொல்ல அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்., ஆனால் தட்சிணை என்னும் பெயரில் போவோர் வருவோர் பணம் கேட்பார்கள் கொஞ்சம் உஷார்., விளக்கு பற்ற வைக்கும் பெண்மணி, குப்பைகள் பெருக்குவோர், கோவிலை சுற்றி காண்பிப்பவர், ஐயர், கோவில் பூசாரி என கிட்டத்தட்ட எல்லாரும் வாய்க்கு வந்ததை கேட்க கொஞ்சம் கோபமும் இருந்தது.


எல்லாம் முடிந்து மதிய உணவு கௌரி சங்கரில் முடித்து வந்த வழியிலயே திரும்பினோம்., ஏழு மணி நேரப் பயணம். ஆந்திர மாநில வழி நெடுகிலும் பழ விற்பனை படு ஜோர். தர்பூசணி, கொய்யா, இளநீர், நெகாப்பழம், சீதாப்பழம் என அனைத்தும் அன்று பரித்தவைகள். விலையும் கம்மி., காரில் போகும் நண்பர்கள் இவர்களிடம் பழம் வாங்கிச் செல்லுங்கள். என்ன ஏதென்று தெரியாமல் கோவிலில் ஆயிரங்களை இறைத்து கிடைக்காத புண்ணியம் இந்த கிராமாவாசிகள் நியாயமாக விற்கும் நல்ல பழங்களை வாங்குவதில் கிடைக்ககூடும். அன்று அவர்கள் நல்ல உணவருந்தக்கூடும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜ கோபுரம் இடிந்து விழுந்த அடையாலாம் கூட தெரியவில்லை. அது எங்கு இருந்தது எப்பொழுது கட்டப் போகிறார்கள் என எதுவும் தெரியவில்லை.,

Monday, July 12, 2010

மதராசபட்டினம்

டப்பாங்குத்து பிற மொழி படங்கள் தமிழாக்கம் செய்து பழக்கபட்டிருக்கிறோம். ஆனால் இந்த படம் டைட்டானிக் சாயல். உயிரே பாடலும் கொஞ்சம் நினைவலைகளில்.,
இதை தவிர்த்து நிச்சயம் இப்படம் ஒரு தரமான படைப்பு.
ஒரு முறையாவது பார்க்கவேண்டிய படம்.

Friday, March 26, 2010

Deal or No Deal...

அலுவல் வேலையாக மீண்டும் அமெரிக்க வந்திருந்தேன்., நேற்றைய பொழுது சமையல் வேலையில் மும்முரமாக ஆழ்ந்திருகையில் தொலைகாட்சியில் ஒளிபரப்பான விளம்பரம் சற்றே என் கவனத்தை ஈர்த்தது..

"Deal or No Deal" - நிகழ்ச்சியின் பெயர்.

ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் கூட சுட படுமா என ஆச்சர்யமும் கொஞ்சம் ஆதங்கமுமே வியாபித்தது. ஒரு அங்குலம் கூட மாறாமல் நிகழ்ச்சியை தமிழ் நாட்டு மக்களுக்கு லவட்டி கொண்டு வந்துள்ளனர் - உங்கள் தொலைக்காட்சி., நிகழ்ச்சி நடத்துபவரின் முன் இருக்கும் ஒரு மேஜை முதல், பெட்டிகளை தூக்கிகொண்டு வரும் அழகிகள் (!!!) வரை அப்பட்டமான copy, xerox!!!

போன முறை அமெரிக்க வந்திருந்த பொழுது கடைசி ஒரு மாதம் சுமார் -20 டிகிரி குளிரிலேயே பொழுதை கழித்திருந்தேன்., ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர் காலம் ஏப்ரல் மாதம் வரை தொடரும்., இன்று மார்ச் 26 2010. இரவு முதல், காலை 10 மணி வரை -5 டிகிரி குளிரும் மதிய நேரத்தில் ஒரு 8-9 டிகிரி குளிரும் இருக்கிறது.. எந்த ஒரு வேலைக்கும் கண்டிப்பாக ஒரு வாகனம் வேண்டும், மூன்று அல்லது நான்கு துணிகள் உடுத்திக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம்., ஒரு வருடத்தில் ஏழு மாத காலம் பனிப்பொழிவும் கடும் குளிரும் கொண்டு விவசாயம் என்பது இந்த நாட்களில் ஒரு கனவாகவே இருக்கும் பட்சத்திலும் கடந்த பல நூற்றாண்டுகளுக்கும் இந்த நூற்றாண்டிலும் ஒரு வல்லாரசாக தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கும் அமெரிக்க மக்களக்கு நாம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்தே ஆகவேண்டும்.

இந்த சாதனை ஒரு பொழுதில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அயராத உழைப்பும், புதிய கண்டுபிடிப்புகளும் இவர்கள் பயணத்தை அழங்கரித்திருப்பினும் தான் கொண்ட கடமையில் அலட்சியம் செய்யாததே இவர்கள் வெற்றியாக நான் கருதுகிறேன். எந்த இடத்திலும் சூழ்நிலையிலும் "என் கடன் பனி செய்வதே" இவர்கள் தாரக மந்திரம்.,

ஒரு பத்து வருட காலம் முதன்மை தொலைகாட்சியாக தங்களை நிரூபித்து கொண்டவர்கள் கூட புதிய முயற்சிகள் செய்யாமல், ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு சாயம் பூசி கொடுக்கும் வேலை செய்யும் பட்சத்தில் எங்கிருந்து வரும் புதிய கண்டுபிடிப்புகள்?????

மூளை ஒவ்வொரு நாளும் மழுங்கடிக்கப்பட்டு கொண்டிருகிறது!!

இருக்கும் இடத்தில உணவு சமைத்தால் மட்டுமே சட்டி உடைகிறது, வெளியூரில் சமைத்தால் லட்டு கிடைக்கிறது என நொண்டி சாக்கு செய்யாமால், இருப்பதை கொண்டு புதியதை கண்டுபிடிப்போமாக! தேவைகள் மட்டுமே கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளதை சற்றே உற்று பார்க்க வேண்டும்! எந்த ஒரு தேவைக்கும் வேறு இடத்தில தேடாமல் நாமாக அதை உருவாக்க முனையும் பொழுது கண்டுபிடிப்புகள் சாமரம் வீசும்.

தொழில்நுட்ப துறையில் இருக்கும் கம்பெனிகளை பொதுவாக  Product மற்றும் Service based என் பெருவாரியாக பிரித்து பார்ப்பார்கள். இதில் Product என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவை [கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், McAfee, போன்ற கம்பெனிகள்], Service  கம்பெனிகள் பொதுவாக வேறொரு கம்பெனிக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைக்காரனே!
இந்தியாவில் இருக்கும் முதல் பத்து தொழில்நுட்ப கம்பனிகளில் ஒன்று கூட Product based இல்லை. நாம் வெறும் சேவை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம்..

இருக்கும் இடத்தை மேம்படுத்துவதிலும் கடமை தவறமால் இருந்திருந்தாலுமே முன்னேற்றமும், அண்டை வீட்டார் / மாநிலத்தார் / நாட்டார் இன் மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்க முடியும்.


..."Bad Girls Club" என்னும் ஒரு நிகழ்ச்சியும் நேற்று பார்த்தேன். கெட்ட வார்த்தைகளுக்கு இடையே கொஞ்சம் பேசவும் செய்திருந்தனர்.. A@@ hole, Fu@king Bit@ch போன்ற வார்த்தைகள் சர்வ சாதரணமாக பேசி கொண்டிருக்க அதனை தமிழாக்கம் செய்து பார்க்க அவ்வளவு நாற்றம் [மனம்]!! கடவுள் பாதி மிருகம் பாதி...

Tuesday, March 2, 2010

சிலி பூகம்பம்...

கடந்த பிப்ரவரி 27 சிலி நாட்டின் கான்செப்சியன் நகரை தாக்கிய பூகம்பத்தை பற்றி உலகறியும்!


இதனோடு தொடர்புடைய ஆச்சர்யத்தை இன்று நாசா அறிவித்தது! "பூகம்பம் பூமியின் axisஇல் மாற்றத்தை உண்டு பண்ணியிருப்பதால் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் 1.26 microseconds குறைவாகவே இருக்கும்"

The change is negligible, but permanent;

மிகப்பெரிய பூகம்பங்கள் பெருவாரியான பாறைகளை நகர்த்திவிடுவதால் சம அளவிலான பூமியின் Mass மாறுபட்டுபோகிறது. இந்த சம அளவு மாறும்பொழுது பூமியின் சுழற்சியிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுழற்சியின் அளவே ஒரு நாளை நிர்ணயிப்பதால் இந்த சிறு நேர மாற்றம். [A microsecond is one-millionth of a second.]

Richard Gross, a geophysicist at NASA's Jet Propulsion Laboratory in Pasadena, கலிபோர்னியா, இந்த axis மாற்றம் ஒரு எட்டு சென்டிமீட்டர்கள் இருக்கும் என் கணித்திருக்கிறார் மேலும் இது போன்ற மாற்றங்கள் இதுவரை கேட்டிராதது என்று வேறு எண்ணெய் ஊற்றுகிறார்!!

என் வாழ்நாளில் இது போன்ற செய்தியை படிப்பது இதுவே முதல் முறை!

classroom2007.blogspot.com என்னும் இணையத்தில் திரு சுப்பையா அவர்கள் ஜோதிடம் பற்றிய பாடங்களை ஒரு முப்பது மாத காலமாக நடத்திக்கொண்டு வருகிறார், அதில் நானும் ஒரு ஆஸ்தான மாணவன்..ஜோதிடத்திற்கு இந்த சுழற்சி முறையும், அட்சயரேகை, தீர்க்கரேகை, [lattitude and longitude], மற்றும் பாகை [degree] அளவு மிக முக்கியம்.,இந்த மாற்றங்களுக்கு பிறகு இதன் அடிப்படை பற்றிய விடயங்களை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது!! [என்ன கொடுமை சரவணன் இது....] CANOPUS2, Goravani, KUNDLI-PRO, LalKitab, Janus போன்ற நிறுவிகள், ப்ரிஹட் ஜாதக, கல்யாண வர்மா சரவல்லி, பாலதீபிக போன்ற புத்தகங்களையும் இது வரை referrence ஆக வைத்து ஜாதகம் படித்து, இருக்கும் நேரத்தை தொலைத்து விட்டேனோ என ஒருபுறம் ஏக்கமும் வருகிறது.,

படிக்க வேண்டிய புத்தகத்தின் வரிசையும் நீண்டு இழுத்து போய்கொண்டிருக்கிறது., சோமவள்ளியப்பன் எழுதிய இட்லியாக இருங்கள் கூட ஒரு நாற்பதாவது பக்கத்திலியே நிற்கிறது.,

புலி வாலை பிடித்த கதையாக உள்ளது என் நிலைமை!!! இந்த நேரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா வேறு காதல் தோல்வியை நினைவுபடுத்துகிறது :)))

Wednesday, February 24, 2010

சச்சின் - 200!!!

மதியம் உணவருந்தி கொண்டிருக்கையில் அலுவல் தொலைகாட்சியில் 2010 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கை ஓடிகொண்டிருந்தது... சற்று நேரம் அதை கவனித்துவிட்டு பின் அன்றாட வேலையில் மூழ்கிப்போனேன்.. மூன்று மணி அளவில் பட்ஜெட் சுருக்கத்தை பார்க்க எண்ணி வலைதளங்களில் மேய்ந்துகொண்டிருகையில் இன்றைய கிரிக்கெட் போட்டி கண்ணில் பட்டது.,

சச்சினின், தீவிர ரசிகனாக முதலில் நான் பார்த்தது சச்சின் அவுட்டா இல்லையா என்பதைத்தான். சச்சின் ஆடிகொண்டிருந்த மனநிறைவில் மேற்கொண்டு வேலையில் ஐக்கியமானேன். சுமார் ஐந்து மணி அளவில் மீண்டும் ஒருமுறை ஸ்கோர்ஐ பார்க்கையில் சச்சின் 186 ரன்களுடுன் ஆடிகொண்டிருக்க கட்டு படுத்த முடியாத ஆர்வத்தோடு நாலாவது மாடியில் இருக்கும் தொலைக்காட்சி அறைக்கு விரைந்தேன்... ஆச்சர்யம்!!!!

சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட அலுவல் நண்பர்கள் ஏற்கனவே குழுமியிருந்தனர்.. உள்ள சென்ற என்னை கடைசி பெஞ்ச் கண்மணிகள் தள்ளி நிற்க சொல்லி கூச்சலிட என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே தொலைக்காட்சி முன்பு தரையில் உட்கார்ந்துகொண்டேன். சச்சின் அப்பொழுது 191 ரன்கள். ஒரு இரண்டு நிமிடங்களில் என்னோடு சேர்ந்து ஒரு இருபது நபர்கள் தரையில் அமர்ந்து கொண்டார்கள் ... [ஆட்டு கூட்டம் தான் ஞாபகத்திற்கு வந்தது]


அடுத்து தொடர்ச்சியாக இரண்டு, இரண்டு ரன்கள் சேர்க்க தற்பொழுதைய உலக சாதனையான 194 ரன்னை கடந்துவிட்டுருந்த சச்சினுக்கு விசில்களும் கூக்குரல்களும் பரிசாக நண்பர்கள் காற்று வழி அனுப்புவித்துகொண்டிருந்தனர். உற்சாகத்தில் நானும் தரையை விட்டு எழுந்தரிக்க பின்னிருந்த குரல்கள் என்னையும் என்னோட சேர்ந்தவர்களையும் அடக்கி கொண்டிருந்தனர்... ஆனால் சச்சினின் விஸ்வரூபம் தொடர்ந்துகொண்டிருந்தது...

டோனி அடித்த ஒவ்வொரு சிச்சர்களையும் சபித்து கொண்டு சச்சினுக்கு ஆட சந்தர்பம் கொடுக்க சொல்லி மேலும் அலறல்கள். இந்த நேரங்களில் மேலும் ஒரு நூறு நபர்கள் குழுமியிருந்தனர்.. கன்னடர்கள், தெலுங்கர்கள், வட மாநிலத்தவர் என் அங்கு ஒரு சங்கமம் நடந்து கொண்டிருந்தது.. ஒவ்வொருவரும் மற்றவருடன் அத்தனை அன்பு பாராட்டி மடியில் உட்காராத குறையாக கத்தி கொண்டிருந்தனர்.... தமிழகத்திற்கு காவேரி நதி நீர் அன்று கோரியிருந்தால் அத்தனை கன்னடர்களும் சரி என்றிருப்பார்கள் போலும்..


சில நிமிடங்களில் உலகம் இது வரை பார்த்திராத சாதனையை சச்சின் செய்து முடிக்க தரையில் இருந்து ஆகாயத்திற்கு அனைவரும் துள்ளி குதித்தனர். உலக அரங்கில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருநூறு ரன்கள் என்ற மாபெரும் சாதனையை முதலில் செய்து காட்டியது ஒரு இந்தியன். ஆம் ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இந்த வயதில் சச்சின் செய்திருப்பது ஒரு இமாலய சாதனை. [சிவசேனா அமைப்பினர் இந்த வெற்றியை மும்பை மக்கள் மட்டுமே ரசிக்க வேண்டும் என்று சொல்லுவாரோ என கொஞ்சம் பயமும் இருக்கிறது]. மிகச்சிறந்த இந்த சாதனைக்கு நம் தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்..

"SRK is like wine, the more its older the more its better." 

Thursday, November 12, 2009

மதுரை டு தேனி [வழி ஆண்டிபட்டி]

இது ஒரு தமிழ் படம்.

எப்பொழுது திரையிடபட்டதென்று தெரியவில்லை., என்றோ எங்கோ எதிலோ இந்த படம் நன்றாக இருந்ததாக படித்த ஞாபகம் வர, 4 மணி அலுவலகம் முடிந்து தங்கியிருந்த அறை வரும் வழியிலேயே இந்த படத்தை இன்று பார்த்து விடுவதென்று முடிவு செய்துகொண்டேன்! நண்பர் அருகிலிருக்கும் town சென்டெரில் byerly's கடைக்கு போக அழைத்ததையும் மறுத்து, பனி கொட்டுவதால் எனக்கு வர mood இல்லை என்று பொய் சொல்லி படம் பார்க்க அமர்ந்தேன்.,

2 மணி நேர படம். நாயகன் நாயகி,இரு வீட்டார், ஒரு பேருந்து, மதுரை பேருந்து நிலையம், இடையில் உசிலம்பட்டி பின்னர் தேனி.. அதிக பட்சம் ஒரு 5 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே இருந்தது.,

எடுத்த எடுப்பிலயே நண்பனின் காதலுக்கு துணை பொய் காவல் நிலையத்தில் கைலியோடு வழக்கம்போல் நமது நாயகர். [அட என்னடா இது, இந்த படம் பார்ப்பதற்கு நண்பருடனே சென்றிருக்கலாம் என அப்பொழுது தோன்றியது]. நாயகனின் அண்ணன் வக்கீல். தம்பிக்கு ஒரு வாத்தியார் வேலை வாங்கிகொடுத்து தேனி அருகில் ஒரு கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார். மதுரை பேருந்து நிலையத்தில் நண்பருடன் அரட்டையில் இருக்கும்போது நாயகி அறிமுகம்., கதர் வெள்ளை வேட்டி சட்டை அப்பாவுடன் பாந்தமாக அறிமுகமாகிறார்., இந்த படத்திற்கும் கதைக்கும் ஏற்ற அறிமுகம். சபாஷ்.

இருவரும் ஒரு சோலைமலை பேருந்தில் மதுரையிலிருந்து தேனி பயணம். நீங்களும் நானும் அந்த வண்டியிலிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதே உணர்வு இப்பொழுதும். தொய்வு குறையாமலிருக்க வேண்டிய அளவு நகைச்சுவை அதுவும் எதார்த்தத்தோடு. நடத்துனர் rajnikanth, ஒற்றை கண் பாட்டி, பாக்யராஜ் பட பொடி வாண்டுகள் என பார்த்த முகங்களே இருப்பினும் அதிகமாக தொய்வு தெரியவில்லை. நாயகர் தான் நல்லவர் என்று நீருபிக்க போகும் வழியில் சில சந்தர்பங்கள், அதில் நாயகியின் காதல் ஒரு ஓரத்தில் ஒட்டி கொள்ள போகும் இடம் விட்டு நாயகயின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டு மனம் முடிப்பது கதை. ஆனால் இதை திரையில் கொண்டுவந்திருக்கும் விதம் அருமை.

கிராமத்து மக்களின் இயல்பு வாழ்க்கை, உரி வைப்பது, உசிலம்பட்டி, இடையில் ஏறும் கல்லுரி மாணவர்கள், குண்டு பெண்ணின் கோபம் என ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தி. மதுரை தொணி என்று சில இடங்களில் கூச்சல், மெதுவாக நகரம் திரைக்கதை என்று சில குறைகள் இருப்பினும், "Nobody is Perfect" என்னும் வாக்கிற்கேற்ப ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தில் 2 மணி நேரம் ஒன்றாக பயணம் சென்ற அனுபவத்தோடு நாமும் இந்த மண் வாசனை படத்தை ஆதரிப்போம்.

Tuesday, November 3, 2009

அமெரிக்கா....

பெரும்பானாலான தொழில்நுட்ப இன்ஜினியர்களின் கனவுகளில் ஒன்றான அமெரிக்கா பயணம், எனக்கும் சற்று சாத்தியமானது. கடந்த அக்டோபர் மாதம் பயணம்.


அதிகாலை மூன்று மணிக்கு தங்கியிருந்த அறையிலிருந்து அம்மா, அத்தை, நண்பன் புடை சூழ பெங்களூர் ஏர்போர்ட், அங்கிருந்து லண்டன் மார்க்கமாக சிக்காகோ, அதன் பின் ஒரு உள்ளூர் விமானம் பிடித்து minnessotta , அங்கிருந்து ஒரு 30 நிமிட கார் பயணத்தில் தங்க வேண்டிய விடுதி என மிக நெடிய பயணம்.

சனி ஞாயிறு விடுமுறை. முதல் நாள் களைப்பு முடிவதற்குள் நண்பரின் தொலைபேசி அழைப்பு அருகிலிருக்கும் கடைக்கு இட்டுச்சென்றது. Taco Bels, Rainbow, Walsgreen, Desi Foods, Walmart, Best Buy, Pizza Corner, Burger Kings, cici's pizza என அமெரிக்காவிற்கே உரித்தான பல junk food கடைகள்! ஒரு வார சமையலுக்கு தேவையான வெங்காயம், தக்காளி, மிளகாய், பால், பழங்கள் என ஒரு 30$ ஸ்வாகா [எந்த ஒரு பொருளையும் உடனே இந்திய ரூபாயோடு ஒப்பிட்டு பார்த்து சாமி நமஸ்காரம் பண்ணியும் இருந்திருந்தேன்] பண்ணி விட்டு தூக்கதோடும் சமயலோடும் முதல் நாள் இனிதே நிறைவுற்றது!!


அடுத்த நாள் கொஞ்சம் நான் அமெரிக்கா வாழ்கையை உள்வாங்க எண்ணி பக்கத்திலிருக்கும் இடங்களுக்கு ஒரு visit அடித்தேன்! St Paul என்னும் இடத்திற்கு ஒரு உள்ளூர் டாக்ஸி பிடித்து சென்றோம் [போக வர 60$.. அட ங்கோயலே] Thomson கம்பனியின் பாரம்பரிய WestLaw builiding, Capital Buidling, mississippi river மற்றும் உள்ளூர் வீதிகளில் ஒரு 3 மணி நேர நடை..

நன்கு plan பண்ணிய நாடு, சுத்தமான சாலைகள், அழகான புல்தரைகள், வசதியான கார்கள், அழகான பெண்கள் என எங்கும் ஒரு ரிச்னசுடன் காணப்பட்டது அமெரிக்கா! Richaagavum அழகாகவும் இருக்கும் அமெரிக்காவிடம் ஒரு உயிரோட்டம் இல்லாத உணர்வோடு நான் மேலும் சில நாட்களின் தனிமை தவத்தோடு.

Saturday, October 10, 2009

Diya

எப்பொழுதும் போல் அலுவலகம் முடிந்து நேற்றும் ஒரு 9 மணி அளவில் வீடு திரும்ப ஆயத்தமானேன். புதிய அலுவலக நண்பர் அஜய் ரமோலா நான் தங்கி இருக்கும் சில்க் போர்டு பக்கத்தில் குடியிருப்பதாகவும் தன்னை போகும் வழியில் இறக்கி விடுமாறும் கேட்டு கொண்டார்.. ஒரு 20 நிமிட பயணம் என்றே நினைக்கிறேன், அவர் சொல்லி வந்த விடயங்கள் சற்றே ஆச்சரியமாக இருந்தது..

பொதுவாக வட இந்தியர்கள் ஒரு முரட்டு குணம் கொண்டவர்கள் என்ற எண்ணம் என்னுள் இருந்திருந்தது., MS நான் BITS,பிலானியில் முடிக்க வேண்டிய தருணத்தில் project விடயமாக அங்க செல்ல வேண்டி இருந்தது. 6 நாள் பயணத்தில் 5-6 வட மாநிலங்களை பார்த்த பின் தான் அந்த எண்ணம் தவறு என்று பட்டது.. Panickers Travel என்னும் சுற்றுலா agency மூலம் இனியதளம் வழியாகவே முன்னேற்பாடு பயணத்தை பதிவு செய்திருந்தோம். இறங்கியது முதல் வந்து சேரும் வரை அவர்களின் பொறுப்பு. 5 நாட்களும் எங்களுக்கு ஓட்டுனராக பணி புரிந்த நண்பர் நாங்கள் கடைசியாய் கொடுத்த இனாம் 500 ரூபாயை வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொடுத்த போதும் சரி, ஒவ்வொரு வட இந்திய குடும்பமும் தங்களின் வீட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெரும் பொழுதும் சரி பிறரைபற்றிய நம் பொதுவான எண்ணங்கள் பெரும்பாலும் தவறு என்றே தோன்றுகிறது. 

கமல் சொன்னதுபோல் generalize பண்ணுவது மிக தவறு.

பயணத்தில் நண்பர் தான் ஒரு "Shri Ram Sharma Acharya" அவர்களின் சீடன் என்றும், All World Gayatri பரிவார் சங்கத்தின் தீவிர உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டுள்ளதாகவும், அதுவே தன் முதல் பணி என்றும் ஆணித்தரமாக கூறினார். "Shriram Sharma ஆச்சர்ய" அவர்கள் சிவனின் ஒரு பிறவியாக தான் நம்புவதாகவும் அவரின் ஆன்மா தங்களின் உறுப்பினர்கள் 10 கோடி பேரையும் வழி நடத்துவதாகவும், பொது தொண்டே அவர்க்கு நாங்கள் செய்யும் தொண்டு என்றும் கூறினார். தங்களின் இயக்கத்தில் உலக அளவில் சேவகர்களாக பலர் சேர்ந்துஇருப்பதாகவும் அதில் தமிழகம்தான் சிறந்த தொண்டாற்றி வருவதாகவும் கூறி வியப்படைய செய்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குழு, அவர்களுக்கு கீழ் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு குழு என வீதி வீத்யாக தாங்கள் வியாப்பிதிருப்பதாக புதிர் கூட்டினார். இயலாதவர்களுக்கு உதவுவது, பள்ளி கல்லுரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு போதனை என்று இவர்களது list நீண்டு கொண்டே போகிறது... "All World Gayatri Pariwar." என்பது சற்றே இந்து பேராக இருப்பதால், மற்ற இனத்தவரிடம் போதிய reach இல்லை என்பதற்காக இப்பொழுது புதிய இணையம் ஒன்றை தொடங்கி இருகிறார்கள்

உங்கள் பார்வைக்காக அது...
http://diya.net.in/
"DIVINE INDIA YOUTH ASSOCIATION"

ஆயிரம் கதைகளில் மனம் லயிக்கவில்லை என்ற பொழுதும் செய்கின்ற காரியம் நல்லதாக இருப்பதால் நமது வாழ்த்துக்களை பதிவிட்டு கொள்வோமாக!! பிடித்தவர்கள் மேற்சொன்ன இணையத்தில் தகவல்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நான் என்னை இதில் இணைத்து கொள்ளவில்லை :). அவரின் வேண்டுகோளுக்காக ஆந்தர வெள்ளத்திற்கு ஒரு சிறு தொகையும், ஒரு முறை ரத்த தானமும் செய்துள்ளேன்,

Just an attendance from myside for this society.
வளரட்டும் மனிதம்!

Saturday, September 19, 2009

உன்னைப்போல் ஒருவன்

உலகத்தரமான ஒரு படைப்பு.,

கமல் ஹாசன் மற்றும் மோகன் லால் இணைந்துள்ளார்கள் -  பல கோடி இந்திய மக்களுக்கும் தீவிரவாதத்தை பற்றிய அறிவை சற்றே அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்வதற்காக!

சற்றே சிறிய படமாயினும் சொல்ல வந்த கருத்தை நெத்தியில் அடித்தது போல் சொல்லியிருப்பது படத்தின் மிக பெரிய பலம். ஒரு சாதரண குடிமகனின் கோபத்தை இதை விட அழகாக இந்தியாவில் எந்த ஒரு நடிகராலும் நடித்திருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். கமல் ஒரு சகாப்தம் என்பதை மீண்டும் மீண்டும் நீருபித்து கொண்டிருக்கிறார். சற்றே பெரிய தாடியிலும் ஒரு மூக்கு கண்ணாடியிலும் அவ்வளவு பாந்தமாக இருப்பினும், கண்களின் தீர்க்கம் நமது முதுகு தண்டு ஆழம் வரை செல்கிறது. கமல் என்னும் கலைஞன் ஒரு தீர்கதரிசி. வளர்க இவன் தொண்டு.

நான் சற்றும் இளைத்தவனல்ல என்று மோகன் லாலும் பிரமிப்பை உண்டு பண்ணுகிறார். தீர்க்கமான முடிவுகள், உயர் அரசு அலுவலரான லக்ஷ்மியுடன் மோதல், IIT Drop Out ethical hackerஉடன் சில நிமிடங்கள், கதாநாயகனின் பாதுகாப்பு உரையாடல்,  im doing my duty என்று ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களபடுதுகிறார்.

வெடி குண்டு மிரட்டலை பற்றி முதலமைச்சரிடம் சொல்லி கொண்டிருக்கும்போது, "குண்டு வெக்கறன்னு சொல்றாங்களா" என்று கலைஞரின் சாயல் குரல் ஒலிக்கும்போது எழும் கரகோஷம் Raaj Kamal Internationalukku கிடைத்த கரகோஷம். Arif ஆக வரும் காவல்காரர், மிடுக்கான அவர் நண்பர், கமல், மோகன் லால், லக்ஷ்மி என சொல்லிக்கொள்ள 5 அல்லது 6 கதாபாத்திரங்கள், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதி, தமிழ்நாடு காவல்துறை அறை - இதை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக படம் வந்திருப்பதற்கு இரண்டே காரணங்கள்தான்.

1. உலகத்தரமிக்க நடிகர்கள் கமல் மற்றும் மோகன் லால்.
2. சொல்ல வந்த கருத்து :  "மதம் மற்றும் தீவிரவாதம் ஒழியட்டும், மனிதம் வளரட்டும்"

ஸ்ருதி ஹாசன் படத்திற்கு இசை. முதல் படத்தில் இவ்வளவு நேர்த்தியா என அட போட வெக்கும் ரகம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருப்பது முஸ்லிமும்மல்ல, இந்துவுமல்ல, தமிழனுமல்ல ஒரு சராசரி இந்திய குடிமகன் தான் என்று உணர அனைவரும் கண்டிப்பாக  பார்க்க வேண்டிய படம்.

அழகிய தமிழ் மகன் , மாசிலாமணி,  போன்ற படங்களை எடுப்பவர்களும் சரி, விளம்பரம் செய்பவர்களும் சரி இது போன்ற படங்களை பார்த்தாவது தங்கள் மனசாட்சி படி நடந்துகொள்வது மிக உத்தமம் என்றே தோன்றுகிறது.






Sunday, August 16, 2009

Brunch


விக்கி தலைவர் கிட்ட Brunch னா என்னன்னு கேட்டு பார்த்தேன்., காலை உணவையும் மதிய உணவையும் சேர்த்து சாபிடுவதுன்னு போட்ருந்துது..

காலைல ஒரு 11:30 மணிக்கு நம்ம தோஸ்து போன் பண்ணிருந்தாப்ல, அப்டியே பேசும்போது சாப்டயாடன்னு கேட்டான். ஞாயித்து கிழமை பெட்டவிட்டு எந்திரிக்கவே ரொம்ப சிரமம் இதுல எங்க போய் பாஸ்ட பிரேக் பண்ணறது. ஒரே கடுப்ல, இல்லைன்னு சொன்னேன்..

" Break Fast , Lunch எல்லாம் ஒட்டுக்கா ஒரு 12:30 மணிக்கு சாப்ட வேண்டியதுதான்", பசங்க வாழ்கைல இதெல்லாம் சாதரனம்டான்னு சொல்லும்போது தான் அவன் என்னடா breakfast, lunch எல்லாம் ஒண்ணா சேர்த்து "Brunch"ஆ அப்டினான். இந்த தமிழ் கலந்த இங்கிலிஷ தங்க்ளிஷ்ன்னு சொல்லுவோமே அந்த மாதிரி தான் இதுவும்ன்னு நெனச்சிட்டிருந்தேன் இப்போ வரைக்கும்.. ஆனா விக்கி தலைவர் அது தப்புதான்னு புரிய வெச்சாரு..

எதோ காலைல இத பத்தி எழுதனும்னு தோனுச்சு ஆனா இப்போ வேற மாதிரி எழுதிட்டேன்..

படிச்சிட்டு இத மட்டும் நல்ல ஞயாபகம் வெச்சுகோங்க "Brunch" நா இந்த bachelor யூத் சோம்பேறி பசங்க மொடபட்டுட்டு சண்டே ஆடி ஆசஞ்சு இந்த காலைல மதிய சாப்பாடு ரெண்டையும் சேர்த்து ஒண்ணா சாப்பிடுவாங்களே அதேதான்!!! 

Friday, February 27, 2009

I......

I . . .My words cannot express, The feelings I hold.
Let them be unsaid, Let the thoughts be not unfold.

Over and over again, I think of my past.
If I love someone now, It may not ever last.

When the cold winds blow, It's she whose on my mind.
The thoughts on her are deepened, My feelings, soft and kind.

The moon blossoms, by the fall of the night.
My sorrows grieve, And I cannot even fight.

Beautiful is my world, Lonely are my dreams.
Past, still on, I mourn, My tears still flow instreams.

Let me be the same, Try not me to change.
I believe in what I have, Let our feelings not be exchanged . . .

Wednesday, February 11, 2009

Bug-bite


The war was suddenly launched. The provocation on the previous night was the reason for this sudden attack. For so long, there was no one to contend with and none to wage a war with. This time, once there was a realization, swift actions were taken.


The enemy territory was not huge by any means, but their army power in sheer numbers surprises anyone. 
"If you dont have the numbers, you better play clever in the battle". They definitely followed that - they had secret hideouts, surprise weaponry and some Weapons of Mass Destruction's hidden.
But there I was, with a HIT in my hand and host of Mootai-pooochi's in my bed to contend with. (Mootai poochi = bed bug).
Engenthu thaan vanthutho, and I dont know how on earth did I not even feel their effects for so long.
Anyways yesterday was mootai-poochi cleaning day and at the end of it, even though I was tired, sleeping again on the same bed seemed repelling to me. I just hope, I did not miss a male and female in the bed itself. After all, I can only claim victory for a week, they will come back in full force.