இது ஒரு தமிழ் படம்.
எப்பொழுது திரையிடபட்டதென்று தெரியவில்லை., என்றோ எங்கோ எதிலோ இந்த படம் நன்றாக இருந்ததாக படித்த ஞாபகம் வர, 4 மணி அலுவலகம் முடிந்து தங்கியிருந்த அறை வரும் வழியிலேயே இந்த படத்தை இன்று பார்த்து விடுவதென்று முடிவு செய்துகொண்டேன்! நண்பர் அருகிலிருக்கும் town சென்டெரில் byerly's கடைக்கு போக அழைத்ததையும் மறுத்து, பனி கொட்டுவதால் எனக்கு வர mood இல்லை என்று பொய் சொல்லி படம் பார்க்க அமர்ந்தேன்.,
2 மணி நேர படம். நாயகன் நாயகி,இரு வீட்டார், ஒரு பேருந்து, மதுரை பேருந்து நிலையம், இடையில் உசிலம்பட்டி பின்னர் தேனி.. அதிக பட்சம் ஒரு 5 லட்சம் மட்டுமே செலவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே இருந்தது.,
எடுத்த எடுப்பிலயே நண்பனின் காதலுக்கு துணை பொய் காவல் நிலையத்தில் கைலியோடு வழக்கம்போல் நமது நாயகர். [அட என்னடா இது, இந்த படம் பார்ப்பதற்கு நண்பருடனே சென்றிருக்கலாம் என அப்பொழுது தோன்றியது]. நாயகனின் அண்ணன் வக்கீல். தம்பிக்கு ஒரு வாத்தியார் வேலை வாங்கிகொடுத்து தேனி அருகில் ஒரு கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார். மதுரை பேருந்து நிலையத்தில் நண்பருடன் அரட்டையில் இருக்கும்போது நாயகி அறிமுகம்., கதர் வெள்ளை வேட்டி சட்டை அப்பாவுடன் பாந்தமாக அறிமுகமாகிறார்., இந்த படத்திற்கும் கதைக்கும் ஏற்ற அறிமுகம். சபாஷ்.
இருவரும் ஒரு சோலைமலை பேருந்தில் மதுரையிலிருந்து தேனி பயணம். நீங்களும் நானும் அந்த வண்டியிலிருந்தால் எப்படி இருந்திருக்குமோ அதே உணர்வு இப்பொழுதும். தொய்வு குறையாமலிருக்க வேண்டிய அளவு நகைச்சுவை அதுவும் எதார்த்தத்தோடு. நடத்துனர் rajnikanth, ஒற்றை கண் பாட்டி, பாக்யராஜ் பட பொடி வாண்டுகள் என பார்த்த முகங்களே இருப்பினும் அதிகமாக தொய்வு தெரியவில்லை. நாயகர் தான் நல்லவர் என்று நீருபிக்க போகும் வழியில் சில சந்தர்பங்கள், அதில் நாயகியின் காதல் ஒரு ஓரத்தில் ஒட்டி கொள்ள போகும் இடம் விட்டு நாயகயின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டு மனம் முடிப்பது கதை. ஆனால் இதை திரையில் கொண்டுவந்திருக்கும் விதம் அருமை.
கிராமத்து மக்களின் இயல்பு வாழ்க்கை, உரி வைப்பது, உசிலம்பட்டி, இடையில் ஏறும் கல்லுரி மாணவர்கள், குண்டு பெண்ணின் கோபம் என ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தி. மதுரை தொணி என்று சில இடங்களில் கூச்சல், மெதுவாக நகரம் திரைக்கதை என்று சில குறைகள் இருப்பினும், "Nobody is Perfect" என்னும் வாக்கிற்கேற்ப ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தில் 2 மணி நேரம் ஒன்றாக பயணம் சென்ற அனுபவத்தோடு நாமும் இந்த மண் வாசனை படத்தை ஆதரிப்போம்.
1 comment:
நல்லா இருக்கு நண்பா உனது நடையும் எழுத்தும்..
இன்னும் சிறக்க வாழ்த்துகள்.
இடையில் ஆங்கிலம் கலக்காமல் எழுதினால் இன்னமும் அருமையாக இருக்கும்..
Post a Comment