Saturday, October 10, 2009

Diya

எப்பொழுதும் போல் அலுவலகம் முடிந்து நேற்றும் ஒரு 9 மணி அளவில் வீடு திரும்ப ஆயத்தமானேன். புதிய அலுவலக நண்பர் அஜய் ரமோலா நான் தங்கி இருக்கும் சில்க் போர்டு பக்கத்தில் குடியிருப்பதாகவும் தன்னை போகும் வழியில் இறக்கி விடுமாறும் கேட்டு கொண்டார்.. ஒரு 20 நிமிட பயணம் என்றே நினைக்கிறேன், அவர் சொல்லி வந்த விடயங்கள் சற்றே ஆச்சரியமாக இருந்தது..

பொதுவாக வட இந்தியர்கள் ஒரு முரட்டு குணம் கொண்டவர்கள் என்ற எண்ணம் என்னுள் இருந்திருந்தது., MS நான் BITS,பிலானியில் முடிக்க வேண்டிய தருணத்தில் project விடயமாக அங்க செல்ல வேண்டி இருந்தது. 6 நாள் பயணத்தில் 5-6 வட மாநிலங்களை பார்த்த பின் தான் அந்த எண்ணம் தவறு என்று பட்டது.. Panickers Travel என்னும் சுற்றுலா agency மூலம் இனியதளம் வழியாகவே முன்னேற்பாடு பயணத்தை பதிவு செய்திருந்தோம். இறங்கியது முதல் வந்து சேரும் வரை அவர்களின் பொறுப்பு. 5 நாட்களும் எங்களுக்கு ஓட்டுனராக பணி புரிந்த நண்பர் நாங்கள் கடைசியாய் கொடுத்த இனாம் 500 ரூபாயை வேண்டாம் என்று சொல்லி திருப்பி கொடுத்த போதும் சரி, ஒவ்வொரு வட இந்திய குடும்பமும் தங்களின் வீட்டு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெரும் பொழுதும் சரி பிறரைபற்றிய நம் பொதுவான எண்ணங்கள் பெரும்பாலும் தவறு என்றே தோன்றுகிறது. 

கமல் சொன்னதுபோல் generalize பண்ணுவது மிக தவறு.

பயணத்தில் நண்பர் தான் ஒரு "Shri Ram Sharma Acharya" அவர்களின் சீடன் என்றும், All World Gayatri பரிவார் சங்கத்தின் தீவிர உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டுள்ளதாகவும், அதுவே தன் முதல் பணி என்றும் ஆணித்தரமாக கூறினார். "Shriram Sharma ஆச்சர்ய" அவர்கள் சிவனின் ஒரு பிறவியாக தான் நம்புவதாகவும் அவரின் ஆன்மா தங்களின் உறுப்பினர்கள் 10 கோடி பேரையும் வழி நடத்துவதாகவும், பொது தொண்டே அவர்க்கு நாங்கள் செய்யும் தொண்டு என்றும் கூறினார். தங்களின் இயக்கத்தில் உலக அளவில் சேவகர்களாக பலர் சேர்ந்துஇருப்பதாகவும் அதில் தமிழகம்தான் சிறந்த தொண்டாற்றி வருவதாகவும் கூறி வியப்படைய செய்தார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குழு, அவர்களுக்கு கீழ் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு குழு என வீதி வீத்யாக தாங்கள் வியாப்பிதிருப்பதாக புதிர் கூட்டினார். இயலாதவர்களுக்கு உதவுவது, பள்ளி கல்லுரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு போதனை என்று இவர்களது list நீண்டு கொண்டே போகிறது... "All World Gayatri Pariwar." என்பது சற்றே இந்து பேராக இருப்பதால், மற்ற இனத்தவரிடம் போதிய reach இல்லை என்பதற்காக இப்பொழுது புதிய இணையம் ஒன்றை தொடங்கி இருகிறார்கள்

உங்கள் பார்வைக்காக அது...
http://diya.net.in/
"DIVINE INDIA YOUTH ASSOCIATION"

ஆயிரம் கதைகளில் மனம் லயிக்கவில்லை என்ற பொழுதும் செய்கின்ற காரியம் நல்லதாக இருப்பதால் நமது வாழ்த்துக்களை பதிவிட்டு கொள்வோமாக!! பிடித்தவர்கள் மேற்சொன்ன இணையத்தில் தகவல்கள் பெற்றுக்கொள்ளுங்கள். நான் என்னை இதில் இணைத்து கொள்ளவில்லை :). அவரின் வேண்டுகோளுக்காக ஆந்தர வெள்ளத்திற்கு ஒரு சிறு தொகையும், ஒரு முறை ரத்த தானமும் செய்துள்ளேன்,

Just an attendance from myside for this society.
வளரட்டும் மனிதம்!

No comments: