புதிய திருப்பணி
இந்நிலையில் சி.வெங்கிட்டாபுரம்
செ.ரங்கசாமி அவள்களின் பெருமுயற்சியால் நான்கு குலத்தவர்களின் ஒத்துழைப்புடன்
ஆயிரத்து தொள்ளயிரத்து எழுபத்தி ஐந்தாம் ஆண்டு (3-11-1975 அன்று) முத்துக்கவுண்டன்புதூர்
காலஞ்சென்ற சு.சின்னசாமிக்கவுண்டர் தலைமையில் கானங்குலம் காலஞ்சென்ற
வா.லிங்கசாமிகவுண்டரை துணைத் தலைவராகவும், கொடுமணல் வீ.இராமசாமிக்கவுண்டரை
செயலாளராகவும், செங்கோடகவுண்டன்புதூர் செ.சென்னியப்பகவுண்டரைப் பொருளாளராகவும்
கொண்ட திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பொறுப்பில் நான்கு குல மக்களின்
பெரும் பொருள் உதவி பெற்று தங்கம்மனுக்கு புதிய திருக்கோயில் அமைக்கப்பட்டது.
மேலும் திருமதில் தீர்த்தக்கிணறு தங்கும் இடங்கள் ஏற்ப்படுத்தபட்டது.
ஆலயத்துக்காக நிலம் வாங்கி கிணறு வெட்டி
தென்னந்தோப்பு வைக்கபட்டது. புதிய திருக்கோயில் திருக்குட நீராட்டு விழா 2-2-1979 அன்று சிறப்புற
நடைபெற்றது.
தொடர்ந்து
திருப்பணிகள்
நான்கு குலத்தவர்களும் சேர்ந்து கொடுமணல்
அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணிச் சங்கம் என்கிற பெயரில் சங்கம் பதிவு
செய்யப்பட்டு தங்கம்மன் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் இதர திருப்பணிகளையும்
செய்து வருகிறது.
கோயிலைச் சுற்றிலும் உள் பிரகாரம்
கல்தளம் அமைக்கப்பட்டது. மேலும் திருக்கோயிலின் மூன்று வாயில்களும் புதிய முன்
மண்டபங்களும் பிரகாரத்தில் புதிய குதிரை வாகனங்களும் அமைக்கப்பட்டது. மேலும்
திருக்குட நீராட்டு செய்யப்பட்டு பனிரெண்டு ஆண்டுகளுக்குள் மறுமுறையும் திருக்குட
நீராட்டு செய்ய வேண்டும் என்கிற நியதியின் படி 21-2-1991-ல் இரண்டாம் முறையாக அருள்மிகு
தங்கம்மன் திருக்கோயில் திருக்குட நீராட்டுப் பெருவிழா வெகு விமர்சையாக
நடைபெற்றது.
1997-ல் முன்னாள் திருப்பணிக்குழுத் தலைவர் நினைவாக அன்னதான
மண்டபம் கட்டப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதியும், பூஜை
செய்யும் அர்ச்சகருக்கு கோயில் அருகே வீடும் கட்டப்பட்டது. ஆற்றுக் கன்னிமார்,
புற்றுநாகர், செல்வ விநாயகர் திருக்கோயில்கள் புதியதாக கட்டி தங்கம்மன் ஆலயத்தை
மேலும் அழுகுற திருப்பணி செய்து 6-2-2003-ல் மூன்றாவதாக திருக்குட நீராட்டுப் பெருவிழா வெகுசிறப்பாக
செய்யப்பட்டது.
அருள்மிகு தங்கம்மன் திருக்கோயில் உடன்
இணைந்த அருள்மிகு அக்னீஸ்வரர் – திரிபுரசுந்தரியம்மன் கோயில்கள் நொய்யல் ஆற்று
ஒரத்துப்பாளையம் அணையில் மூழ்கி விட்ட படியால் தங்கம்மன் கோயில் அருகே மேற்படி
சுவாமிகளுக்கும், அதற்குரிய பரிவார தெய்வங்களுக்கும் புதிய கோயில்கள் கட்டி
24-6-2005-ல் திருக்குட நீராட்டு விழா சிறப்பாக
செய்யப்பட்டது.
தங்கம்மன் கோயிலுக்கு வரும் வழியில்
அலங்கார வளைவும், தங்கம்மன் கோயில் அருகே மணி மண்டபமும் கட்டப்பட்டது.
பக்தர்கள் பொங்கல் வைப்பதற்க்கு வசதியாக
மண்டபம் கட்டப்பட்டது.
தங்கம்மன் திருக்கோயிலுக்கு தற்பொழுது
ஒன்பது ஏக்கர் நிலம் நமது குலத்தைச் சேர்ந்த அன்பர்களின் உதவியால்
வாங்கப்பட்டுள்ளது. தினசரி திருப்பூரிலிரிந்து அரசு நகரப் பேருந்துகள் தங்கம்மன்
கோயிலுக்குவந்து போகிறது.
சிறப்பு பூஜைகள்
தங்கம்மனுக்கு தினசரி மூன்று கால பூஜைகள்
மற்றும் மாதந்தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்வருடப் பிறப்பு, சித்ரா பௌர்ணமி, சரஸ்வதி
பூஜை, கார்த்திகை தீபம், மாசி மகா சிவராத்திரி போன்ற விசேச தினங்களில் சிறப்பு
பூஜைகள் நடைபெற்று வருகிறது.
திருவிழாக்கள்
ஆண்டு தோறும் ஆடிமாதம் 18-ம் நாள்
ஆடிப்பண்டிகை விழாவும், அதற்கு அடுத்துவரும் புதன்கிழமை பொங்கல் திருவிழாவும்
சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
தங்கம்மன் திருவருள் துணையால் நான்கு
குலத்தவர்களின் ஒத்துழைப்புடன் போது மக்கள் உதவி கொண்டு ஆலய நற்பணிச் சங்கத்தின்
மூலம் தங்கம்மன் ஆலயப்பனிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அன்னதானம்
தங்கம்மன் ஆலயத்தில் நடைபெறுகின்ற
சிறப்பு வழிபாட்டு நிகழ்சிகளுக்கும், திருவிழக்களுக்கும் வருகின்ற பக்தர்களுக்கு
தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment