Tuesday, February 12, 2013

அருள்மிகு தங்கம்மன் திருவருட்பாடல்கள் 3



எங்கள் தாய் தங்காத்தா

தங்காத்தா தங்காத்தா தாயே எங்கள் தங்காத்தா
கொடுமணலாம் ஊரினிலே கொலுவிருக்கும் தங்காத்தா
ஆற்றங்கரை ஓரத்திலே அமர்ந்தவளே தங்காத்தா
அருள்கொடுத்து காப்பவளே அன்னை எங்கள் தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

ஏழுபேர் கன்னியரே இணைபிரியால் தங்காத்தா
எங்கள்குல தேவதையே வானமகளே தங்காத்தா
புற்றினிலே வாழ்பவளாம் புகழ்நிறைந்த தங்காத்தா
புதுமைபல செய்பவளே அருள்மகளே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

சேரகுல மக்களுக்கு சிறப்புத்தரும் தங்காத்தா
பாண்டியகுல மக்களையே பாதுகாக்கும் தங்காத்தா
பனங்காடை குலதவர்க்குப் பக்கத்துணை தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

ஆதிசக்தி நாயகியே எங்கள் தாயே தங்காத்தா
அனைத்துலகும் நிறைந்தவளே எங்கள் தாயே தங்காத்தா
சோதிவடி வானவளே எங்கள் தாயே தங்காத்தா
சுகமனைத்தும் தருபவளே எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

மஞ்சள் மடை வாழ்பவளே எங்கள் தாயே தங்காத்தா
மகிமைபல கொண்டவளே எங்கள் தாயே தங்காத்தா
ஆற்றங்கரை நாயகியே எங்கள் தாயே தங்காத்தா
உன் அருள் வேண்டி வந்தோமம்மா எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

தேடிவந்த மக்களுக்கு எங்கள் தாயே தங்காத்தா
தேவி நீயும் துணைவருவாய் எங்கள் தாயே தங்காத்தா
உனைநாடிவந்த மக்களுக்கு எங்கள் தாயே தங்காத்தா
நன்மை எல்லாம் தருபவளே எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

துன்பமெல்லாம் நீக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
துயரமெல்லாம் போக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
கஷ்டமெல்லாம் நீக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
கவலையெல்லாம் போக்கிடுவாய் எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

நோய்நொடிகள் தீர்ப்பவளேதா எங்கள் தாயே தங்காத்தா
நூறாண்டு வாழவைப்பாய் எங்கள் தாயே தங்காத்தா
வெள்ளைநாகன் வடிவினிலே எங்கள் தாயே தங்காத்தா
வேண்டும்வரம் தருபவளே எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

ஐந்துசுற்று கல்கோட்டை எங்கள் தாயே தங்காத்தா
அழகுமணி மண்டபங்கள் எங்கள் தாயே தங்காத்தா
எழுசுற்று கல்கோட்டை எங்கள் தாயே தங்காத்தா
எழிலான மண்டபங்கள் எங்கள் தாயே தங்காத்தா
(தங்காத்தா தங்காத்தா)

பத்துசுற்று கல்கோட்டை எங்கள் தாயே தங்காத்தா
பளிங்குமணி மண்டபங்கள் எங்கள் தாயே தங்காத்தா
மண்டபத்துக் குள்ளிருந்து எங்கள் தாயே தங்காத்தா
உன் மக்களையே காத்திடுவாய் எங்கள் தாயே
தங்காத்தா

(தங்காத்தா தங்காத்தா)

-தங்கம். வீ. இராமசாமிக்கவுண்டர்

அருள்மிகு தங்கம்மன் திருவருட்பாடல்கள் 2



தருவாய் தங்கம்மா
கொங்குத் திருநாட்டில் நிறைந்தவளே
கொடுமணல் காணியிலே வளர்ந்தவளே
காஞ்சிநதிக் கரையோரம் அமர்ந்தவளே
மஞ்சள்மடையில் மகிமைகள் புரிந்தவளே

ஏழுபேர் கன்னியரே தங்கம்மாநீ
எங்கள்குலம் காத்திடவே வாருமம்மா
நான்குகுல மக்களுக்கு தாயுமானாய்
நாயகியே தங்கம்மா எங்களம்மா

செல்வம் மிகுந்திடவே அருள்புரிவாய்
திக்கெட்டும் புகழ்பரவ ஒலிதருவாய்
உறுதியுடன் செயல்புரிய பலம்கொடுப்பாய்

பக்தியுடன் உந்தனையே நினைப்பவர்க்கு
பக்கத்தில் நீயிருந்து துணைவருவாய்
உன்நாமம் துதிப்பவர்க்கு உடனிருந்து
உயர்வுசெயவாய் எங்கள்ம்மா தங்கம்மாவே!

அருள்மிகு தங்கம்மன் திருவருட்பாடல்கள் 1



அருள்மிகு தங்கம்மன் துணை
அருள்மிகு தங்கம்மன் திருவருட்பாடல்கள்
காப்பு
அகர முதலைங்கரன் ஆறுமுகன் பொன்னம்பலவன்
அம்பிகை திருச்சிற்றம்பலவன் திரு அரங்கன்
தங்கம்மன் தாயவர்களின் அடித்தாமரைகள் சிரமேற் காப்பு
-ஸ்ரீ வித்யா அம்மா

தங்கம்மன் துதி

ஓம் பிராமணி போற்றி
ஓம் நாராயணி போற்றி
ஓம் மகேசுவரி போற்றி
ஓம் கெளமாரி போற்றி
ஓம் வராகி போற்றி
ஓம் இந்திராணி  போற்றி
ஓம் ருத்திராணி  போற்றி
ஓம் சப்தமாதா தேவி போற்றி
ஓம் தங்கம்மன் தாயே போற்றி


காஞ்சிமாநதி தன்னிலே வளர் கண்ணிமாமயி லன்னமே
கருதலாடரும் இனிய வேடரும் பணிபதாம்புய பூரணி
வாஞ்சயாகவே மலர் பதந்தனை மனதில் வைத்திடும் அன்னையே
வளமையாகவே பவிசு பாக்கியம் அருளுகாரணிவல்லியே
பூஞ்சோலை நீள் வாவி தாமரைப் பொய்கை நீறு நீராடியே
புண்ணியரூபி புரந்தரி சத்தி பூரணி கவுமாறியே
ஆய்ந்தமிழ் அறுபத்து நாலுகலைக் கானவள் நீருபியே
ஆதி கொடுமணல் தன்னிலே வளர் ஆயி தங்கமரம்மனே
---- பழங்கால எட்டுச்சுவடிப் பாடல்.

கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் வரலாறு 4



தங்கம்மன் அருள்
அன்னை தங்கம்மன் தன அடியார்களுக்குப் பூரணமாக அருள் பாலித்து வருகிறாள். இதனை ஆலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்லும் அன்பர்கள் நன்கு உணர்கின்றனர். தங்கள் வாழ்வில் மெய்யாக நடப்பதையும் அறிகின்றனர்.

அருள்மிகு தங்கம்மன் திருக்கோயில் காணியாளர்களின் இல்லத்துப்பெண்கள் திருமணம் ஆகிச்செல்லும் இடங்களில் சீருடனும் சிறப்புடனும் வாழ தங்கம்மன் அருளே நிறைந்து விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. அவ்வாறே காணியாளர்கள் வேண்டுகின்றனர். அனைத்தும் நலமாக முடிகிறது. இதற்குப் பலர் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சான்றாகக் காட்டலாம்.

பழங்காலத்தில் பல அற்புததத் திருவிளையாடல்களைத் தங்கம்மன் விளையாடி இருக்கிறாள். அவற்றுள் ஒன்று நம் கற்பனைக்கு எட்டாதது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு பலமுறை நடந்த நிகழ்ச்சி.

  • கொடுமணல் காணியாளர்களின் வீட்டில் பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றால் கொங்கு வேளாளர் வழக்கப்படி பெண் வீட்டில் திருமணம் நடைபெறுதல் இயல்பு.

திருமணத்திற்கு முந்தைய நாள் திருமண வீட்டாரும் உற்றார்களும் உறவின் முறையாரும் திருமணத்தை முன்ன்னின்று நடத்தி வைக்கும் அருமைப் பெரியோர்களும் மங்கள வாத்தியத்துடன் ஒரு சிறு கூடையில் தேங்காய் பழம், பிற பூஜைக்குரிய பொருட்கள், அபிஷேகப் பொருட்கள் அனைத்தையும் வைத்து எடுத்துக்கொண்டு சென்று பக்திப் பரவசத்துடன் திருக்கோயில் முன்னால் நொய்யல் ஆற்று ஆணை அருகே வைத்து விட்டுத் திரும்புவர்.

பின்னர் இரண்டு நாழிகை நேரம் சென்று அவ்வாறே அனையருகே பார்க்கும் பொழுது அவர்கள் வைத்த கூடையில் திருமனதிற்குரிய அணைத்து நகைகளும் இருக்கும் அதைக் கொண்டு வந்து பெண்ணுக்கு அணிவித்துத் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவர்.

திருமணம் முடிந்த பின் முன் போலவே அனைவரும் கொண்டு சென்று நகையை வைத்து விட்டு வந்தது விடுவர். சிறிது நேரம் கழித்துப் போய்பார்த்தால் நகை இருக்காது. இச்சபவம் நடைபெற்றதை உள்ளூர் காணியாளர்கள் பலர் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்டதை நினைவு கூறுகின்றனர்.

  • கோயிலுக்கு அருகே எல்லையில் ஒரு புற்று இருக்கிறது. அந்த புற்றில் ஒரு வெள்ளை நாகம் வாழ்ந்து வந்தது. கோயில் திருப்பணி நடைபெறும் பொழுதும் பிற சமயங்களிலும் பகல் 11,12 மணிக்கெல்லாம் திருப்பணி செய்யும் அன்பர்களும் பிறரும் வரும்பொழுது பல நேரங்களில் ஆலயத்திற்கு உள்ளும், ஆலய எல்லைக்குள்ளும் பல சந்தர்பங்களில் அந்த வெள்ளை நாகம் காட்சியளித்துள்ளது. ஆலய அர்ச்சகரும் அவ்வெள்ளை நாகத்தைப் பலமுறை நேரில் கண்டுள்ளார் என்றும் அடியார்களுக்கு அதனால் ஒரு சிறு தொல்லைகூட ஏற்பட்டது கிடையாது. அம்மன் அருளினால் நாகசக்தி இவ்வாறு இருந்தது ஒரு பெரும் அற்புதமான செயலே.

  • சில ஆண்டுகளுக்கு முன் நில அளவையாளர் ஒருவர் இத்தங்கம்மன் கோயில் மேல் தலத்தில் தம் கருவிகளுடன் அளவையை நடத்திக் கொண்டு இருந்தார். நல்ல வெயில் காலம் பகல் 1 மணி இருக்கும், அவருக்கு நல்ல பசி, தண்ணீர் தாகம் அப்பொழுது ஒரு சிறுமி தண்ணீர் கொண்டு கோயிலுக்குள் செல்வதை அவர் கண்டார். தன உதவியாளரை அழைத்து ஒரு சிறுமி தண்ணீர் கொண்டு செல்கிறாள் தண்ணீர் வாங்கி வா என்றார். உதவியாளர் உள்சென்று பார்த்தபோது அங்கு யாருமே இல்லை எவர் வந்த அடையாளமும் தெரியவில்லை. பின்னர் இருவரும் விசாரித்ததில் தங்கம்மனே அப்படிச் சிறுபெண் வடிவத்தில் தோன்றி அருள்பாளிததாக அறிந்தனர். பக்திப் பரவசமான அவர்கள் அருகில் இருந்த பெரியவரிடம் பத்து ரூபாயைக் கொடுத்துப் பூஜை செய்ய ஏற்பாடு செய்து வழிபட்டுச் சென்றனர்.