ஒரு வாரமாகவே வலைப்பூவில் பதிவிடவேண்டும் என
மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஷக்லேச்பூர் அருகே
காட்டிற்குள் தங்கி இருந்ததையும், திருவண்ணாமலை சென்றதையும்., கடந்த வெள்ளிக்கிழமை
புதிய போர்ட் ஈகோஸ்போர்ட் வண்டி வாங்கியதை பற்றியும் எழுத வேண்டும் என அவ்வப்போது
எண்ணிக்கொண்டிருந்தேன்.
புதிதாய் சேர்ந்த கம்பெனியில் வேலை நேரம் போக, சாயுங்காலம்
தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு வீடு வரும்பொழுதே மணி எட்டரை
ஆகிவிடும். பின்னர் உணவு முடித்து, மேல் மாடி வீட்டில் ஒரு மணிநேரம்
சீட்டாட்டம் வேறு. பக்கத்துக்கு வீடு எதிர்த்தவீடு என எழு எட்டு பேர் அவர்
வீட்டில் தினமும் சங்கமம். சிவராத்திரி அன்று விடியற்காலை மூன்று மணி வரை சீட்டாடியது
நினைவு வருகிறது.
இவை அனைத்தும் முடித்திவிட்டு வீடு வந்து
அமெரிக்க முதலாளிகளின் மெயில் ஏதேனும் வந்திருந்தால் அதற்கான வேலை முடித்துவிட்டு படுக்கும்போது
மணி இரண்டு இரண்டரை ஆகிவிடிகிறது. இதில் நேரமில்லாமல் சுற்றிக்கொண்டு எழுத
முடியவில்லை. இன்று வழக்கம்போல் எல்லா வேலைகளும் முடித்துவிட்டு மேல் சென்று
நீங்கள் ஆடுங்கள் எனக்கு ஆபீஸ் வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு எல்லா
வேலைகளையும் முடித்துவிட்டு திருவண்ணாமலை பற்றி எழுத தொடங்கிவிட்டேன்.
பல முறை திருவண்ணாமலை சென்றிருந்தாலும் கிரிவலத்திற்கு
இது இரண்டாவது முறை. முதல் முறை பௌர்ணமி அன்று.
பிப்ரவரி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை இரவு வர அன்று நண்பர்கள் எல்லோரும் போவது என்று முடிவு பண்ணி ஒரு வாரம் முன்னதாகவே பேசி வைத்துகொண்டோம். வெள்ளிக்கிழமை சாயுங்காலம் உணவு முடித்துவிட்டு எட்டு மணி அளவில் கிளம்புவது என்றும் திருவண்ணாமலை பனிரெண்டு மணிக்கு சேர்ந்து காலை ஐந்து மணிக்குள் கிரிவலம் முடித்துவிட்டு வீடு திரும்புவதென்றும் தோராயமாக கணக்கு.
பிப்ரவரி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை இரவு வர அன்று நண்பர்கள் எல்லோரும் போவது என்று முடிவு பண்ணி ஒரு வாரம் முன்னதாகவே பேசி வைத்துகொண்டோம். வெள்ளிக்கிழமை சாயுங்காலம் உணவு முடித்துவிட்டு எட்டு மணி அளவில் கிளம்புவது என்றும் திருவண்ணாமலை பனிரெண்டு மணிக்கு சேர்ந்து காலை ஐந்து மணிக்குள் கிரிவலம் முடித்துவிட்டு வீடு திரும்புவதென்றும் தோராயமாக கணக்கு.
வியாழக்கிழமை இரவு பெரோசும் ராஜேஷும் தங்களுக்கு
சனி ஞாயிறு வேறு வேலை வந்துள்ளதாக சொல்லி கிளம்பிவிட நான், பாலா மற்றும் அசோக்
மூவரும் பேசியபடி கிளம்பிவிடுவததென்று முடிவு பண்ணிவிட்டு அசோக், பெரோஸ் வீட்டிலேயே
தூங்க நான் பாலா அவரவர் வீட்டிற்கு சென்று விட்டோம்.
வீடு செல்லும்போது முதல் மாடியில் புதிதாய்
குடி வந்திருக்கும் முத்து எதற்கோ கீழே வர நானும் சற்று பேசிவிட்டு திருவண்ணாமலை
போவதை சொல்ல அவரும், நானும் வருகிறேன் என்றார். சரி மூன்று பேர்தானே இவரும் வரட்டும்,
வாங்க என்றேன். அவரும் போய் ஒரு முறை என் மனைவியும் வருகிறாளா என கேட்டுவிட்டு
வருகிறேன் என கேட்டு வந்து பின் இவர் மட்டும் வருவது உறுதியாகியது. நண்பர்கள்
குழுவிற்கு வாட்சாப்பில் தகவல்
கொடுத்துவிட்டு தூங்கி அடுத்த நாள் ஆபீஸ் போய் இருப்பு கொள்ளாமல் மதியம் ஒரு
இரண்டு மணியளவில் வீடு வந்துவிட்டேன்.
எதிர் வீட்டில் இருக்கும் கல்கத்தா நண்பர் (நாங்கள்
அவரை ப்ரோ என அழைப்போம். அவர் பெயர் ஞாபகமில்லை. ஒரு இரண்டு வருடங்களாகவே ப்ரோ என
அழைத்து இப்பொழுதுதான் அவர் பெயர் தெரியாததே உணர்கிறேன் J) ப்ரோ நான் ரெடி எப்போ கெளம்பலாம் என்றான். நாயகன்
படத்தில் பாப்பா மர்கயா என் சொல்லி வரும் ஒரு பாத்திரம் போலவே ஒரு பச்சை ஜிப்பாவும்
வெள்ளை பேண்டும் போட்டுக்கொண்டு நின்றார். இவன் எங்க இப்டி நிக்கிறானு,
அசோக்குக்கு போன் பண்ணி
நான் : யோவ் பாப்பா மர்கயா ரெடியா நிக்கிது என்ன
மேட்டர்.
அசோக் :
நைட் நீங்க போனதுக்கப்புறம் வந்தாண்ட, நானும் வரேன்
சொன்னான் சரி மூனுபேர்தானே வானேன் ஏன்டா.
சொன்னான் சரி மூனுபேர்தானே வானேன் ஏன்டா.
நான் :
நானும் மூணு பேருன்னு முத்துவ வர சொல்லிட்டேன்
அவரு எழு மணிக்கு ரெடி ஆகிருவேனாறு.
அவரு எழு மணிக்கு ரெடி ஆகிருவேனாறு.
அசோக் :
சில்ரடா நீ.
நான் :
ஆமா நீ பெரிய நோட்டு. என்ன பண்ணலாம் அஞ்சு
பேராயிருச்சு. மர்கயாவ போட்ரலாமா??
பேராயிருச்சு. மர்கயாவ போட்ரலாமா??
அசோக் :
பாவம்டா. ஷிப்ட் எல்லாம் ஏதோ மாத்திவிட்டுட்டு
வந்திருக்கான். அட்ஜஸ்ட் பண்ணி போயிர்லாம்.
வந்திருக்கான். அட்ஜஸ்ட் பண்ணி போயிர்லாம்.
நான் :
சரி விடு. சீக்கிரம் வா நாங்க வந்தாச்சு.
அசோக் :
டேய் நான் ஆபீஸ் போகல. வீட்ல தான் இருக்கேன்.(நீ எப்ப
போன) சரி குளிச்சிட்டு சீக்கிரம் வரேன்.
போன) சரி குளிச்சிட்டு சீக்கிரம் வரேன்.
நான் :
ஓகே மச்சி. வரும்போது எனக்கு ஒரு வேட்டி எடுத்துட்டு
வா. கேரளா மாப்ளை, கல்யான் ஜெவ்ல்லர்ஸ், ஏகப்பட்டது
வச்சிருப்பயே.
வா. கேரளா மாப்ளை, கல்யான் ஜெவ்ல்லர்ஸ், ஏகப்பட்டது
வச்சிருப்பயே.
அசோக் :
போடா !@#$@#!$#@$
சிறிது நேரம் வீட்டின் வெளிய நின்று அரட்டை
அடித்துவிட்டு நான் குளித்து வரவும் அசோக் பாலா ரெடி ஆகி வரவும் சரியாக இருந்தது.
அவர்கள் இருவரும் வேஷ்டி சட்டை. அசோக் எனக்கு ஒரு நாலு முழ வேஷ்டியும் ஒரு எட்டு
முழ வேஷ்டியும் கொண்டுவந்திருந்தார். அதில் ஒன்றை வாங்கி கட்டிக்கொண்டு, மற்ற நண்பர்கள்
வர புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு நாங்கள் தயார்.
முத்து மேல் மாடியிலிருந்து பேண்ட்டோடு வர,
பாலா : யோவ் நாங்கெல்லாம் எப்டி இருக்றோம் போய்
மாத்திட்டு வாயா.
அவரும் சென்று வேஷ்டி கட்டிக்கொண்டு வர, அன்று எங்கள் வீதியே அல்லகோலப்பட்டது. அசோக் தன்
ஸ்கோடா ராபிட் காரில் வந்திருந்தார். நாங்கள் நால்வர் மற்றும் ப்ரோ என ஐந்து
பேரும் ஒரு எட்டு மணி அளவில் பயணம் ஆரம்பம்.
இரண்டு மணி நேரத்தில் கிருஷ்ணகிரி பக்கத்தில் மெக்
டொனல்ட்ஸ் இருக்கும் உணவு விடுதியில் இரவு
உணவுக்கு நிறுத்தினோம். தமிழ்நாட்டு வட கரி உணவகம் ஒன்று பக்கத்தில் இருக்க அங்கு
சென்று ஒரு பிடி பிடித்தோம். தண்ணீர் கொஞ்சம் நொறுக்கு தீனி என அங்கே மூட்டை
கட்டிக்கொண்டு கிளம்ப தயாரானோம்.
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை திருவண்ணாமலை சாலை மிகவும் மோசமான
நிலையில் இருப்பதாக நிறைய பேர் சொல்லி இருந்தனர். ஒரு வருடத்திருக்கு முன்பு அம்மாவை அழைத்துக்கொண்டு
மாற்று வழியில் திருவண்ணாமலை சென்றது ஞாபகம் வர கூகிள் துணையோடு வேறு மாற்று
வழி தேடத்தொடங்கினோம். ஒரு முப்பது கிலோமீட்டர் தூரம் அதிகம் என்றாலும் கீழே
இருக்கும் இந்த வழி சுப்பர். இடையில் ஒரு ஐந்து கிலோமீட்டர் பொத்தல் சாலை
தவிர்த்து கிருஷ்ணகிரி முதல் திருவண்ணாமலை வரை குண்டு குழியற்ற சாலை. வளைவுகள் இருந்தாலும் ஒரு தொண்ணூறு கிலோமீட்டர்
வேகத்தில் அனாயசமாக செல்லலாம்.
பெங்களூர் -> ஹோசூர் -> கிருஷ்ணகிரி ->
கரிமங்கலம் -> மொரப்பூர் -> ஹரூர் -> திருவண்ணாமலை.
ஆங்காங்கே இடையில் தேனீர் கொஞ்சம் ரெஸ்ட் என ஒரு
பனிரெண்டரை மணி அளவில் திருவண்ணாமலை சென்றடைந்தோம். கூட்டம் அவ்வளவாக தெரியவில்லை.
காரை நிறித்துவிட்டு செருப்பு, கைபேசி, பணம் போன்றவற்றை ஒழுங்கு பண்ணிவிட்டு
கிரிவலத்திற்கு அயத்தமாணோம்.
கிரிவலம் தொடங்கும் இடத்துக்கும் நாங்கள் காரை
நிறுத்திய இடத்திற்க்கும் ஒரு இரண்டு கிலோமீட்டர் இருந்திருக்கும். நடந்து செல்ல
செல்ல கூட்டம் அலைமோதியது. அருகில் இருக்கும் காவலரிடும் நான் சென்று “கூட்டங்களா”
என்றேன். இப்போ ஒண்ணும் இல்லப்பா சாயந்தரம் இத விட பத்து மடங்கு கூட்டம். !!!!
அடங்கப்பா !!!! இரவு ஒரு மணிக்கு நாங்கள் பார்த்தது லட்சம் பேர் இருந்திருக்ககூடும்.
அப்போ ஒரு ஐந்து லட்சம் பேராவது இன்று கிரிவலம் வந்திருப்பார்கள். ஒவ்வொரு மாதமும்
இதே கூட்டம். காவல் துரையினர் திருவண்ணாமலை ஊரில் வசிப்பவர்கள் படும் பாடு என்னவாக
இருக்கும்?? பாவம் அவர்கள்.
முட்டி மோதி கிரிவலம் ஆரம்ப இடத்திருக்கு வந்து கொஞ்சம்
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு [ஒரு காவலாளி: வாங்க வாங்க நிக்காதீங்க நல்லவன்
மாதிரி தான் இருப்பான் டக்குன்னு சங்கிலி அறுத்துட்டு ஓட்டிடுவான். உங்க
நல்லதுக்குத்தான் சொல்றேன் நிக்காதீங்க நடங்க நடங்க ..... மனம் ஏனோ பண்ணியது.]
விளக்கு ஏற்றிவிட்டு எங்கள் நடை பயணம் துவங்கும்போது மணி ஒரு இரண்டு
இருந்திருக்கும்.
வீதியெங்கும் குப்பை கூலம். கரும்பு ஜூஸ்,
தேநீர், சர்பத், இளநீர், உணவு தட்டு, விளம்பர காகிதங்கள் என வழி நெடுகிலும்
குப்பை. ஒரு கடைக்கும் இன்னொரு கடைக்கும் இடைவெளி இல்லாத அளவிற்கு கடைகள்.
பொருட்காட்சி திடல் போல் இருந்தது மொத்த கிரிவல பாதையும். போகும் வழியில் பேருந்து
நிலையம், அவர்கள் சவுகரியத்திற்கு ஓட்டுகிறார்கள். கிரிவலம் செல்பவர்களும் போகும்
பேருந்தில் ஏறிக்கொண்டு கொஞ்ச தூரம் அதிலேயே சென்று பின் இறங்கி நடை
தொடர்கிறார்கள். என்னே பக்தி. நித்தியானந்தவின் குடில் வேறு போகும் வழியில்.
வெள்ளையர்கள் நிறையேவே வந்திருந்தார்கள்.
அவர்களும் அதே கிரிவல பாதையில் மிகுந்த சிரமத்தோடு நேர்த்தி செலுத்தினர். சரியாக
ஒரு எழு கிலோமீட்டர் கிரிவலம் முடியும் பொழுது மலையின் பின்புறம் வந்திருப்போம்.
நிலவொளியில் மலை மிக அழகாக இருந்தது. போகும்போது இதை ரசிக்க மறந்துவிடாதீர்கள்.
ஒவ்வொரு ராசிக்காரருக்கும் ஒரு சிவலிங்கம் என
பனிரெண்டு ராசிக்கும் ஒரு லிங்க தரிசனம் என ஆங்கங்கே போர்டு வைத்துள்ளர்கள். சிலர்
போகும் பாதையில் இருக்கும் எல்லா சிவனையும் தரிசித்து செல்கிறார்கள், சிலர் தங்கள்
ராசிக்கு உண்டான சிவனை தரிசித்திவிட்டு செல்கிறார்கள். சிலர் ஓட்டமும் நடையுமாய் சுற்றி வருகிறார்கள்.
நாங்களும் மெதுவாக ஆங்காங்கு ஓய்வெடுத்து ஒரு
ஐந்து மணி அளவில் கிரிவலம் முடித்தோம். அசோக் காலில் அடிபட கொஞ்சம் நொண்டி நொண்டி
வந்து சேர்ந்தார். கோவில் உள்ளே செல்லலாம் என பார்த்தால் கூட்டம். அஷோக்கும்
பாலாவும் நாங்கள் வரவில்லை என சொல்லி காரில் சென்று தூங்கிவிட்டனர். நான், ப்ரோ,
முத்து மூவரும் உள்ளே சென்று நல்லதாய் ஒரு தரிசனம் முடித்துவிட்டு காருக்கு
செல்லும்போது மணி ஒரு ஏழரை.
அம்மாவிற்கு தொலைபேசியில் தகவல் கொடுத்துவிட்டு வந்தே
வழியே எங்கள் பயணம் தொடர்ந்தது. ஒரு எட்டு மணி அளவில் நண்பர் பிரின்ஸ் சென்னையில்
இருந்து அழைத்தார்.
பிரின்ஸ் :டேய்
நான் பெங்களூர் வரேன் கார எடுத்துட்டேன், நீங்க எத்தன மணிக்கு வருவீங்க???
நாங்கள் :
இப்போதான் வண்டி எடுக்றோம். சாப்டுட்டு அப்டியே வர மதியம் ஆகிடும்.
பிரின்ஸ் :
சரி நான் கிருஷ்ணகிரி காபி டேவில் வெயிட் பண்றேன் சீக்கிரம் வாங்க.
மாற்றி மாற்றி வண்டி ஒட்டி, கொஞ்சம் களைப்புடன்
கிருஷ்ணகிரி காபி டே வர மணி சுமார் மதியம் பனிரெண்டு இருந்திருக்கும். பிரின்ஸ் காரில் தூங்கி கொண்டிருக்க நாங்களும் வந்து சேர்ந்து அனைவரும் தேனீர்
அருந்திவிட்டு இரண்டு காரிலும் மூன்று மூன்று பேராக ஒரு இரண்டு மணி அளவில் வீடு
வந்து சேர்ந்தோம்.
மதிய உணவை முடித்துவிட்டு கொஞ்சம் வெட்டி பேச்சு
என் அன்றைய தினத்தில் உறங்கும் பொழுது இரவு ஒரு மணி. முதல் முறையாக தொடர்ந்து ஒரு
நாற்பத்தெட்டு மணிநேரம் தூங்காமல் இருந்தாலும் மனம் சிவமயத்தால் நிறைந்திருந்தது. (கோவை அருகே வெள்ளியங்கிரி மலை ஏறியதும் அதன் அடுத்த வாரமே திருப்பதி மலை ஏறி இறங்கியது பற்றியும் எழுதவேண்டும்...)
பித்தா பிறை சூடி
பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து
உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா
உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து
உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா
உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே -
இறைவா சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே -
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை
பயமே சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே -
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை
பயமே சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
அத்தனில்லாமல் ஒரு அம்மையில்லை
அத்தனில்லாமல் ஒரு
அம்மையில்லை -
அந்த அம்மையில்லாமல் இந்தப் பிள்ளையில்லை
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே...
அந்த அம்மையில்லாமல் இந்தப் பிள்ளையில்லை
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே...
1 comment:
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூவலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_1703.html?showComment=1401109674868#c9081758398151123041
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment