இவன் எழுதியதை அவனோ,
அவன் எழுதியதை இவனோ,
வாழ்த்துச்செய்தியாக கைபேசிகள் நாளை பரிமாறிக்கொள்ளும்;
குடிகாரர்களின் கூடாரங்கள் கும்மாளமிடும்,
ஓசோன் ஓட்டைகள் புகைத்தலால் நிரப்பிக்கொள்ளும்,
பல கர்பங்களுக்கான ஒத்திகைகள் அரங்கேறும்;
உல்லாச கிழ ஆளுநர்கள்,
குழந்தை பாலியல் வல்லுறுக்கள்,
லட்சம் கோடி ஊழல்,
கல்மாடியின் கபடி,
மகிந்த ஆட்சி,
பாசத்தலைவனுக்கு பாராட்டு;
தொலைக்காட்சிகளும் சென்ற ஆண்டை சற்றே திரும்பிப்பார்க்கும்;
எது வந்திட எனக்கென்ன,
என் குடும்பம் சுகம்;
உன் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்;
நானே விடுத்தேன் முதல் வாழ்த்தை இன்றே,
நாளைய குறுஞ்செய்தி விலை அதிகம்!!!