அலுவல் வேலையாக மீண்டும் அமெரிக்க வந்திருந்தேன்., நேற்றைய பொழுது சமையல் வேலையில் மும்முரமாக ஆழ்ந்திருகையில் தொலைகாட்சியில் ஒளிபரப்பான விளம்பரம் சற்றே என் கவனத்தை ஈர்த்தது..
"Deal or No Deal" - நிகழ்ச்சியின் பெயர்.
ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் கூட சுட படுமா என ஆச்சர்யமும் கொஞ்சம் ஆதங்கமுமே வியாபித்தது. ஒரு அங்குலம் கூட மாறாமல் நிகழ்ச்சியை தமிழ் நாட்டு மக்களுக்கு லவட்டி கொண்டு வந்துள்ளனர் - உங்கள் தொலைக்காட்சி., நிகழ்ச்சி நடத்துபவரின் முன் இருக்கும் ஒரு மேஜை முதல், பெட்டிகளை தூக்கிகொண்டு வரும் அழகிகள் (!!!) வரை அப்பட்டமான copy, xerox!!!
போன முறை அமெரிக்க வந்திருந்த பொழுது கடைசி ஒரு மாதம் சுமார் -20 டிகிரி குளிரிலேயே பொழுதை கழித்திருந்தேன்., ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர் காலம் ஏப்ரல் மாதம் வரை தொடரும்., இன்று மார்ச் 26 2010. இரவு முதல், காலை 10 மணி வரை -5 டிகிரி குளிரும் மதிய நேரத்தில் ஒரு 8-9 டிகிரி குளிரும் இருக்கிறது.. எந்த ஒரு வேலைக்கும் கண்டிப்பாக ஒரு வாகனம் வேண்டும், மூன்று அல்லது நான்கு துணிகள் உடுத்திக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம்., ஒரு வருடத்தில் ஏழு மாத காலம் பனிப்பொழிவும் கடும் குளிரும் கொண்டு விவசாயம் என்பது இந்த நாட்களில் ஒரு கனவாகவே இருக்கும் பட்சத்திலும் கடந்த பல நூற்றாண்டுகளுக்கும் இந்த நூற்றாண்டிலும் ஒரு வல்லாரசாக தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கும் அமெரிக்க மக்களக்கு நாம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்தே ஆகவேண்டும்.
இந்த சாதனை ஒரு பொழுதில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அயராத உழைப்பும், புதிய கண்டுபிடிப்புகளும் இவர்கள் பயணத்தை அழங்கரித்திருப்பினும் தான் கொண்ட கடமையில் அலட்சியம் செய்யாததே இவர்கள் வெற்றியாக நான் கருதுகிறேன். எந்த இடத்திலும் சூழ்நிலையிலும் "என் கடன் பனி செய்வதே" இவர்கள் தாரக மந்திரம்.,
ஒரு பத்து வருட காலம் முதன்மை தொலைகாட்சியாக தங்களை நிரூபித்து கொண்டவர்கள் கூட புதிய முயற்சிகள் செய்யாமல், ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு சாயம் பூசி கொடுக்கும் வேலை செய்யும் பட்சத்தில் எங்கிருந்து வரும் புதிய கண்டுபிடிப்புகள்?????
மூளை ஒவ்வொரு நாளும் மழுங்கடிக்கப்பட்டு கொண்டிருகிறது!!
இருக்கும் இடத்தில உணவு சமைத்தால் மட்டுமே சட்டி உடைகிறது, வெளியூரில் சமைத்தால் லட்டு கிடைக்கிறது என நொண்டி சாக்கு செய்யாமால், இருப்பதை கொண்டு புதியதை கண்டுபிடிப்போமாக! தேவைகள் மட்டுமே கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளதை சற்றே உற்று பார்க்க வேண்டும்! எந்த ஒரு தேவைக்கும் வேறு இடத்தில தேடாமல் நாமாக அதை உருவாக்க முனையும் பொழுது கண்டுபிடிப்புகள் சாமரம் வீசும்.
தொழில்நுட்ப துறையில் இருக்கும் கம்பெனிகளை பொதுவாக Product மற்றும் Service based என் பெருவாரியாக பிரித்து பார்ப்பார்கள். இதில் Product என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவை [கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், McAfee, போன்ற கம்பெனிகள்], Service கம்பெனிகள் பொதுவாக வேறொரு கம்பெனிக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைக்காரனே!
இந்தியாவில் இருக்கும் முதல் பத்து தொழில்நுட்ப கம்பனிகளில் ஒன்று கூட Product based இல்லை. நாம் வெறும் சேவை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம்..
இருக்கும் இடத்தை மேம்படுத்துவதிலும் கடமை தவறமால் இருந்திருந்தாலுமே முன்னேற்றமும், அண்டை வீட்டார் / மாநிலத்தார் / நாட்டார் இன் மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்க முடியும்.
..."Bad Girls Club" என்னும் ஒரு நிகழ்ச்சியும் நேற்று பார்த்தேன். கெட்ட வார்த்தைகளுக்கு இடையே கொஞ்சம் பேசவும் செய்திருந்தனர்.. A@@ hole, Fu@king Bit@ch போன்ற வார்த்தைகள் சர்வ சாதரணமாக பேசி கொண்டிருக்க அதனை தமிழாக்கம் செய்து பார்க்க அவ்வளவு நாற்றம் [மனம்]!! கடவுள் பாதி மிருகம் பாதி...
Friday, March 26, 2010
Tuesday, March 2, 2010
சிலி பூகம்பம்...
கடந்த பிப்ரவரி 27 சிலி நாட்டின் கான்செப்சியன் நகரை தாக்கிய பூகம்பத்தை பற்றி உலகறியும்!
இதனோடு தொடர்புடைய ஆச்சர்யத்தை இன்று நாசா அறிவித்தது! "பூகம்பம் பூமியின் axisஇல் மாற்றத்தை உண்டு பண்ணியிருப்பதால் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் 1.26 microseconds குறைவாகவே இருக்கும்"
The change is negligible, but permanent;
மிகப்பெரிய பூகம்பங்கள் பெருவாரியான பாறைகளை நகர்த்திவிடுவதால் சம அளவிலான பூமியின் Mass மாறுபட்டுபோகிறது. இந்த சம அளவு மாறும்பொழுது பூமியின் சுழற்சியிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுழற்சியின் அளவே ஒரு நாளை நிர்ணயிப்பதால் இந்த சிறு நேர மாற்றம். [A microsecond is one-millionth of a second.]
Richard Gross, a geophysicist at NASA's Jet Propulsion Laboratory in Pasadena, கலிபோர்னியா, இந்த axis மாற்றம் ஒரு எட்டு சென்டிமீட்டர்கள் இருக்கும் என் கணித்திருக்கிறார் மேலும் இது போன்ற மாற்றங்கள் இதுவரை கேட்டிராதது என்று வேறு எண்ணெய் ஊற்றுகிறார்!!
என் வாழ்நாளில் இது போன்ற செய்தியை படிப்பது இதுவே முதல் முறை!
classroom2007.blogspot.com என்னும் இணையத்தில் திரு சுப்பையா அவர்கள் ஜோதிடம் பற்றிய பாடங்களை ஒரு முப்பது மாத காலமாக நடத்திக்கொண்டு வருகிறார், அதில் நானும் ஒரு ஆஸ்தான மாணவன்..ஜோதிடத்திற்கு இந்த சுழற்சி முறையும், அட்சயரேகை, தீர்க்கரேகை, [lattitude and longitude], மற்றும் பாகை [degree] அளவு மிக முக்கியம்.,இந்த மாற்றங்களுக்கு பிறகு இதன் அடிப்படை பற்றிய விடயங்களை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது!! [என்ன கொடுமை சரவணன் இது....] CANOPUS2, Goravani, KUNDLI-PRO, LalKitab, Janus போன்ற நிறுவிகள், ப்ரிஹட் ஜாதக, கல்யாண வர்மா சரவல்லி, பாலதீபிக போன்ற புத்தகங்களையும் இது வரை referrence ஆக வைத்து ஜாதகம் படித்து, இருக்கும் நேரத்தை தொலைத்து விட்டேனோ என ஒருபுறம் ஏக்கமும் வருகிறது.,
படிக்க வேண்டிய புத்தகத்தின் வரிசையும் நீண்டு இழுத்து போய்கொண்டிருக்கிறது., சோமவள்ளியப்பன் எழுதிய இட்லியாக இருங்கள் கூட ஒரு நாற்பதாவது பக்கத்திலியே நிற்கிறது.,
புலி வாலை பிடித்த கதையாக உள்ளது என் நிலைமை!!! இந்த நேரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா வேறு காதல் தோல்வியை நினைவுபடுத்துகிறது :)))

Subscribe to:
Posts (Atom)