Thursday, December 30, 2010

2011

இவன் எழுதியதை அவனோ,
அவன் எழுதியதை இவனோ,
வாழ்த்துச்செய்தியாக கைபேசிகள் நாளை பரிமாறிக்கொள்ளும்;

குடிகாரர்களின் கூடாரங்கள் கும்மாளமிடும்,
ஓசோன் ஓட்டைகள் புகைத்தலால் நிரப்பிக்கொள்ளும்,
பல கர்பங்களுக்கான ஒத்திகைகள் அரங்கேறும்;

உல்லாச கிழ ஆளுநர்கள்,
குழந்தை பாலியல் வல்லுறுக்கள்,
லட்சம் கோடி ஊழல்,
கல்மாடியின் கபடி,
மகிந்த ஆட்சி,
பாசத்தலைவனுக்கு பாராட்டு;
தொலைக்காட்சிகளும் சென்ற ஆண்டை சற்றே திரும்பிப்பார்க்கும்;

எது வந்திட எனக்கென்ன,
என் குடும்பம் சுகம்;
உன் குடும்பத்திற்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்;
நானே விடுத்தேன் முதல் வாழ்த்தை இன்றே,
நாளைய குறுஞ்செய்தி விலை அதிகம்!!!

Tuesday, September 7, 2010

காலஹஸ்தி

டேய் அம்மா காளஹஸ்திக்கு போகச் சொல்லி சும்மா நச்ச்சரிக்கராங்கடா என எப்பொழுதும்போல அரட்டை அடித்துக்கொண்டிருந்தோம் அன்று.,
வரும் வாரம் ரம்ஜான் நோன்புக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, மூணுநாள் லீவுக்கு ஊருக்கு போய்டுவோம் அதனால இந்த வாரம் காலஹஸ்தி போய்டலாம் நானும் வரேன்னு நண்பர்கள் சொல்ல பயணத்துக்கு பிள்ளையார்சுழி போடப்பட்டது.,




கால சர்ப்ப தோஷத்திற்கு சனிக்கிழமை ராகு காலம் உகந்தது என இணையதள தேடல்கள் ஒவ்வொன்றும் முடிவுரை கூற சனிக்கிழமை காலை 9-10:30 ராகு காலத்திற்குள் அங்கு சென்று விட முடிவாகியது. சதீஸ்க்கு போன் பண்ணி "டேய் சனிக்கிழமை காலஹஸ்தி போகறதுக்கு கார் வேணும், உனக்கு என்ன பிளான்" 


'நான் ஊருக்கு போறேன் எனக்கு கோகுலாஷ்டமிக்கு வியாழக்கிழமை லீவ், வெள்ளிக்கிழமை நான் லீவ் போட்டுட்டு நாலு நாள் போறேன். புதன்கிழமை சாயந்தரம் வந்து வண்டிய வாங்கிக்கோ"
[ஐந்து நிமிட உரையாடல், நீள் மேல் விசாரிக்காமல் வந்து வண்டி வாங்கிகோன்னு  சொல்ற நண்பர்கள் இருக்கும் பொழுது இந்த தோஷம் என்ன பண்ணிடபோகுதுன்னு உள்ளூர ஒரு நெனப்பு வேற., ]
எப்படிப் போவது எந்த வழி நல்லது, பக்கம் என எல்லா விசாரிப்புகளும் முடிந்து சனிக்கிழமை காலை 3:30 மணிக்கு பயணம் ஆரம்பமானது.


தங்கியிருக்கும் அறையிலிருந்து krpuram வழியாக ஹோசக்கோட்டை- கோலார் - பலமனேர் - சித்தூர் - திருப்பதி வழியாக காலஹஸ்தி வந்தடைந்தோம்., ஐந்து மணி நேரப் பயணம். 8:30 மணிக்கு கோயில் முன்பு ஆஜர்., கர்நாடகச் சாலைகளை தவிர்த்து மற்ற அனைத்தும் சூப்பர். ஆந்திரா மாநில சாலைகள் அழகு. தமிழ்நாட்டில் இருக்கும் நான்கு வழிச் சாலைகள் போல் இல்லை எனினும் மேடு பள்ளம் இல்லாத இரு வழிப் பாதை, மலைகளினூடே சில நேரம், சாணி தெளித்து கோலம் போடும் கிராமத்து குடும்பங்கள், தாய் கோழியுடன் இறை தேடிக்கொண்டிருந்த குட்டிகள், சில்லென்ற மழைச சாரல் என வழி நெடுகும் நிறைய கவிதைகள் வியாபித்திருந்தது!


கோவில் முழுவதும் தெலுங்கிலும் தமிழிலும் பெயர் பலகைகள். இருக்கும் அனைவரும் நம்மை எந்த மொழி என்று விசாரித்து பின் நம் மொழி பேசுகிறார்கள்., கால சர்ப்ப தோஷ நிவாரண பூஜைக்கு தொண்ணூறு சதவிதம் மக்கள் வந்திருந்தனர். கொஞ்சம் கூட்டம்.


Indian rupee250 - கோவிலிக்கு வெளிய ஒரு பொது மண்டபத்தில் பூஜை. கூட்டத்தை பொருத்து சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேர வரிசை.
Indian rupee600 - கோவிலுக்கு வெளியே மற்றொரு மண்டபம். ஒரு பத்து சதவித கூட்டம் குறைந்திருக்கக் கூடும். 
Indian rupee1000 - கோவிலுக்குள்ளே முருகர் சிலை முன்பு பூஜை மற்றும் பரிகாரம். ஒரு மணி நேரம்.
Indian rupee1500 - கோவிலுக்குள்ளே மூலவர் முன்பு ஸ்பெஷல் பூஜை., இவர்களுக்கு எல்லா மரியாதையும் உண்டு.,


எல்லா பூஜைகளும் மண்டபத்தில் தான்., ஐயர் மைக்கில் சொல்ல அனைவரும் அதை பின்பற்ற வேண்டும் அவ்வளவுதான்., ஆனால் தட்சிணை என்னும் பெயரில் போவோர் வருவோர் பணம் கேட்பார்கள் கொஞ்சம் உஷார்., விளக்கு பற்ற வைக்கும் பெண்மணி, குப்பைகள் பெருக்குவோர், கோவிலை சுற்றி காண்பிப்பவர், ஐயர், கோவில் பூசாரி என கிட்டத்தட்ட எல்லாரும் வாய்க்கு வந்ததை கேட்க கொஞ்சம் கோபமும் இருந்தது.


எல்லாம் முடிந்து மதிய உணவு கௌரி சங்கரில் முடித்து வந்த வழியிலயே திரும்பினோம்., ஏழு மணி நேரப் பயணம். ஆந்திர மாநில வழி நெடுகிலும் பழ விற்பனை படு ஜோர். தர்பூசணி, கொய்யா, இளநீர், நெகாப்பழம், சீதாப்பழம் என அனைத்தும் அன்று பரித்தவைகள். விலையும் கம்மி., காரில் போகும் நண்பர்கள் இவர்களிடம் பழம் வாங்கிச் செல்லுங்கள். என்ன ஏதென்று தெரியாமல் கோவிலில் ஆயிரங்களை இறைத்து கிடைக்காத புண்ணியம் இந்த கிராமாவாசிகள் நியாயமாக விற்கும் நல்ல பழங்களை வாங்குவதில் கிடைக்ககூடும். அன்று அவர்கள் நல்ல உணவருந்தக்கூடும்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜ கோபுரம் இடிந்து விழுந்த அடையாலாம் கூட தெரியவில்லை. அது எங்கு இருந்தது எப்பொழுது கட்டப் போகிறார்கள் என எதுவும் தெரியவில்லை.,

Monday, July 12, 2010

மதராசபட்டினம்

டப்பாங்குத்து பிற மொழி படங்கள் தமிழாக்கம் செய்து பழக்கபட்டிருக்கிறோம். ஆனால் இந்த படம் டைட்டானிக் சாயல். உயிரே பாடலும் கொஞ்சம் நினைவலைகளில்.,
இதை தவிர்த்து நிச்சயம் இப்படம் ஒரு தரமான படைப்பு.
ஒரு முறையாவது பார்க்கவேண்டிய படம்.

Friday, March 26, 2010

Deal or No Deal...

அலுவல் வேலையாக மீண்டும் அமெரிக்க வந்திருந்தேன்., நேற்றைய பொழுது சமையல் வேலையில் மும்முரமாக ஆழ்ந்திருகையில் தொலைகாட்சியில் ஒளிபரப்பான விளம்பரம் சற்றே என் கவனத்தை ஈர்த்தது..

"Deal or No Deal" - நிகழ்ச்சியின் பெயர்.

ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் கூட சுட படுமா என ஆச்சர்யமும் கொஞ்சம் ஆதங்கமுமே வியாபித்தது. ஒரு அங்குலம் கூட மாறாமல் நிகழ்ச்சியை தமிழ் நாட்டு மக்களுக்கு லவட்டி கொண்டு வந்துள்ளனர் - உங்கள் தொலைக்காட்சி., நிகழ்ச்சி நடத்துபவரின் முன் இருக்கும் ஒரு மேஜை முதல், பெட்டிகளை தூக்கிகொண்டு வரும் அழகிகள் (!!!) வரை அப்பட்டமான copy, xerox!!!

போன முறை அமெரிக்க வந்திருந்த பொழுது கடைசி ஒரு மாதம் சுமார் -20 டிகிரி குளிரிலேயே பொழுதை கழித்திருந்தேன்., ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தொடங்கும் குளிர் காலம் ஏப்ரல் மாதம் வரை தொடரும்., இன்று மார்ச் 26 2010. இரவு முதல், காலை 10 மணி வரை -5 டிகிரி குளிரும் மதிய நேரத்தில் ஒரு 8-9 டிகிரி குளிரும் இருக்கிறது.. எந்த ஒரு வேலைக்கும் கண்டிப்பாக ஒரு வாகனம் வேண்டும், மூன்று அல்லது நான்கு துணிகள் உடுத்திக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம்., ஒரு வருடத்தில் ஏழு மாத காலம் பனிப்பொழிவும் கடும் குளிரும் கொண்டு விவசாயம் என்பது இந்த நாட்களில் ஒரு கனவாகவே இருக்கும் பட்சத்திலும் கடந்த பல நூற்றாண்டுகளுக்கும் இந்த நூற்றாண்டிலும் ஒரு வல்லாரசாக தன்னை நிலைநிறுத்தி கொண்டிருக்கும் அமெரிக்க மக்களக்கு நாம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்தே ஆகவேண்டும்.

இந்த சாதனை ஒரு பொழுதில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அயராத உழைப்பும், புதிய கண்டுபிடிப்புகளும் இவர்கள் பயணத்தை அழங்கரித்திருப்பினும் தான் கொண்ட கடமையில் அலட்சியம் செய்யாததே இவர்கள் வெற்றியாக நான் கருதுகிறேன். எந்த இடத்திலும் சூழ்நிலையிலும் "என் கடன் பனி செய்வதே" இவர்கள் தாரக மந்திரம்.,

ஒரு பத்து வருட காலம் முதன்மை தொலைகாட்சியாக தங்களை நிரூபித்து கொண்டவர்கள் கூட புதிய முயற்சிகள் செய்யாமல், ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு சாயம் பூசி கொடுக்கும் வேலை செய்யும் பட்சத்தில் எங்கிருந்து வரும் புதிய கண்டுபிடிப்புகள்?????

மூளை ஒவ்வொரு நாளும் மழுங்கடிக்கப்பட்டு கொண்டிருகிறது!!

இருக்கும் இடத்தில உணவு சமைத்தால் மட்டுமே சட்டி உடைகிறது, வெளியூரில் சமைத்தால் லட்டு கிடைக்கிறது என நொண்டி சாக்கு செய்யாமால், இருப்பதை கொண்டு புதியதை கண்டுபிடிப்போமாக! தேவைகள் மட்டுமே கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளதை சற்றே உற்று பார்க்க வேண்டும்! எந்த ஒரு தேவைக்கும் வேறு இடத்தில தேடாமல் நாமாக அதை உருவாக்க முனையும் பொழுது கண்டுபிடிப்புகள் சாமரம் வீசும்.

தொழில்நுட்ப துறையில் இருக்கும் கம்பெனிகளை பொதுவாக  Product மற்றும் Service based என் பெருவாரியாக பிரித்து பார்ப்பார்கள். இதில் Product என்பது புதிய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவை [கூகிள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், McAfee, போன்ற கம்பெனிகள்], Service  கம்பெனிகள் பொதுவாக வேறொரு கம்பெனிக்கான ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைக்காரனே!
இந்தியாவில் இருக்கும் முதல் பத்து தொழில்நுட்ப கம்பனிகளில் ஒன்று கூட Product based இல்லை. நாம் வெறும் சேவை மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம்..

இருக்கும் இடத்தை மேம்படுத்துவதிலும் கடமை தவறமால் இருந்திருந்தாலுமே முன்னேற்றமும், அண்டை வீட்டார் / மாநிலத்தார் / நாட்டார் இன் மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்க முடியும்.


..."Bad Girls Club" என்னும் ஒரு நிகழ்ச்சியும் நேற்று பார்த்தேன். கெட்ட வார்த்தைகளுக்கு இடையே கொஞ்சம் பேசவும் செய்திருந்தனர்.. A@@ hole, Fu@king Bit@ch போன்ற வார்த்தைகள் சர்வ சாதரணமாக பேசி கொண்டிருக்க அதனை தமிழாக்கம் செய்து பார்க்க அவ்வளவு நாற்றம் [மனம்]!! கடவுள் பாதி மிருகம் பாதி...

Tuesday, March 2, 2010

சிலி பூகம்பம்...

கடந்த பிப்ரவரி 27 சிலி நாட்டின் கான்செப்சியன் நகரை தாக்கிய பூகம்பத்தை பற்றி உலகறியும்!


இதனோடு தொடர்புடைய ஆச்சர்யத்தை இன்று நாசா அறிவித்தது! "பூகம்பம் பூமியின் axisஇல் மாற்றத்தை உண்டு பண்ணியிருப்பதால் இனிவரும் ஒவ்வொரு நாட்களும் 1.26 microseconds குறைவாகவே இருக்கும்"

The change is negligible, but permanent;

மிகப்பெரிய பூகம்பங்கள் பெருவாரியான பாறைகளை நகர்த்திவிடுவதால் சம அளவிலான பூமியின் Mass மாறுபட்டுபோகிறது. இந்த சம அளவு மாறும்பொழுது பூமியின் சுழற்சியிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுழற்சியின் அளவே ஒரு நாளை நிர்ணயிப்பதால் இந்த சிறு நேர மாற்றம். [A microsecond is one-millionth of a second.]

Richard Gross, a geophysicist at NASA's Jet Propulsion Laboratory in Pasadena, கலிபோர்னியா, இந்த axis மாற்றம் ஒரு எட்டு சென்டிமீட்டர்கள் இருக்கும் என் கணித்திருக்கிறார் மேலும் இது போன்ற மாற்றங்கள் இதுவரை கேட்டிராதது என்று வேறு எண்ணெய் ஊற்றுகிறார்!!

என் வாழ்நாளில் இது போன்ற செய்தியை படிப்பது இதுவே முதல் முறை!

classroom2007.blogspot.com என்னும் இணையத்தில் திரு சுப்பையா அவர்கள் ஜோதிடம் பற்றிய பாடங்களை ஒரு முப்பது மாத காலமாக நடத்திக்கொண்டு வருகிறார், அதில் நானும் ஒரு ஆஸ்தான மாணவன்..ஜோதிடத்திற்கு இந்த சுழற்சி முறையும், அட்சயரேகை, தீர்க்கரேகை, [lattitude and longitude], மற்றும் பாகை [degree] அளவு மிக முக்கியம்.,இந்த மாற்றங்களுக்கு பிறகு இதன் அடிப்படை பற்றிய விடயங்களை சந்தேகிக்க வேண்டி இருக்கிறது!! [என்ன கொடுமை சரவணன் இது....] CANOPUS2, Goravani, KUNDLI-PRO, LalKitab, Janus போன்ற நிறுவிகள், ப்ரிஹட் ஜாதக, கல்யாண வர்மா சரவல்லி, பாலதீபிக போன்ற புத்தகங்களையும் இது வரை referrence ஆக வைத்து ஜாதகம் படித்து, இருக்கும் நேரத்தை தொலைத்து விட்டேனோ என ஒருபுறம் ஏக்கமும் வருகிறது.,

படிக்க வேண்டிய புத்தகத்தின் வரிசையும் நீண்டு இழுத்து போய்கொண்டிருக்கிறது., சோமவள்ளியப்பன் எழுதிய இட்லியாக இருங்கள் கூட ஒரு நாற்பதாவது பக்கத்திலியே நிற்கிறது.,

புலி வாலை பிடித்த கதையாக உள்ளது என் நிலைமை!!! இந்த நேரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா வேறு காதல் தோல்வியை நினைவுபடுத்துகிறது :)))

Wednesday, February 24, 2010

சச்சின் - 200!!!

மதியம் உணவருந்தி கொண்டிருக்கையில் அலுவல் தொலைகாட்சியில் 2010 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கை ஓடிகொண்டிருந்தது... சற்று நேரம் அதை கவனித்துவிட்டு பின் அன்றாட வேலையில் மூழ்கிப்போனேன்.. மூன்று மணி அளவில் பட்ஜெட் சுருக்கத்தை பார்க்க எண்ணி வலைதளங்களில் மேய்ந்துகொண்டிருகையில் இன்றைய கிரிக்கெட் போட்டி கண்ணில் பட்டது.,

சச்சினின், தீவிர ரசிகனாக முதலில் நான் பார்த்தது சச்சின் அவுட்டா இல்லையா என்பதைத்தான். சச்சின் ஆடிகொண்டிருந்த மனநிறைவில் மேற்கொண்டு வேலையில் ஐக்கியமானேன். சுமார் ஐந்து மணி அளவில் மீண்டும் ஒருமுறை ஸ்கோர்ஐ பார்க்கையில் சச்சின் 186 ரன்களுடுன் ஆடிகொண்டிருக்க கட்டு படுத்த முடியாத ஆர்வத்தோடு நாலாவது மாடியில் இருக்கும் தொலைக்காட்சி அறைக்கு விரைந்தேன்... ஆச்சர்யம்!!!!

சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட அலுவல் நண்பர்கள் ஏற்கனவே குழுமியிருந்தனர்.. உள்ள சென்ற என்னை கடைசி பெஞ்ச் கண்மணிகள் தள்ளி நிற்க சொல்லி கூச்சலிட என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே தொலைக்காட்சி முன்பு தரையில் உட்கார்ந்துகொண்டேன். சச்சின் அப்பொழுது 191 ரன்கள். ஒரு இரண்டு நிமிடங்களில் என்னோடு சேர்ந்து ஒரு இருபது நபர்கள் தரையில் அமர்ந்து கொண்டார்கள் ... [ஆட்டு கூட்டம் தான் ஞாபகத்திற்கு வந்தது]


அடுத்து தொடர்ச்சியாக இரண்டு, இரண்டு ரன்கள் சேர்க்க தற்பொழுதைய உலக சாதனையான 194 ரன்னை கடந்துவிட்டுருந்த சச்சினுக்கு விசில்களும் கூக்குரல்களும் பரிசாக நண்பர்கள் காற்று வழி அனுப்புவித்துகொண்டிருந்தனர். உற்சாகத்தில் நானும் தரையை விட்டு எழுந்தரிக்க பின்னிருந்த குரல்கள் என்னையும் என்னோட சேர்ந்தவர்களையும் அடக்கி கொண்டிருந்தனர்... ஆனால் சச்சினின் விஸ்வரூபம் தொடர்ந்துகொண்டிருந்தது...

டோனி அடித்த ஒவ்வொரு சிச்சர்களையும் சபித்து கொண்டு சச்சினுக்கு ஆட சந்தர்பம் கொடுக்க சொல்லி மேலும் அலறல்கள். இந்த நேரங்களில் மேலும் ஒரு நூறு நபர்கள் குழுமியிருந்தனர்.. கன்னடர்கள், தெலுங்கர்கள், வட மாநிலத்தவர் என் அங்கு ஒரு சங்கமம் நடந்து கொண்டிருந்தது.. ஒவ்வொருவரும் மற்றவருடன் அத்தனை அன்பு பாராட்டி மடியில் உட்காராத குறையாக கத்தி கொண்டிருந்தனர்.... தமிழகத்திற்கு காவேரி நதி நீர் அன்று கோரியிருந்தால் அத்தனை கன்னடர்களும் சரி என்றிருப்பார்கள் போலும்..


சில நிமிடங்களில் உலகம் இது வரை பார்த்திராத சாதனையை சச்சின் செய்து முடிக்க தரையில் இருந்து ஆகாயத்திற்கு அனைவரும் துள்ளி குதித்தனர். உலக அரங்கில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருநூறு ரன்கள் என்ற மாபெரும் சாதனையை முதலில் செய்து காட்டியது ஒரு இந்தியன். ஆம் ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இந்த வயதில் சச்சின் செய்திருப்பது ஒரு இமாலய சாதனை. [சிவசேனா அமைப்பினர் இந்த வெற்றியை மும்பை மக்கள் மட்டுமே ரசிக்க வேண்டும் என்று சொல்லுவாரோ என கொஞ்சம் பயமும் இருக்கிறது]. மிகச்சிறந்த இந்த சாதனைக்கு நம் தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்..

"SRK is like wine, the more its older the more its better."