கமல் ஹாசன் மற்றும் மோகன் லால் இணைந்துள்ளார்கள் - பல கோடி இந்திய மக்களுக்கும் தீவிரவாதத்தை பற்றிய அறிவை சற்றே அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்வதற்காக!
சற்றே சிறிய படமாயினும் சொல்ல வந்த கருத்தை நெத்தியில் அடித்தது போல் சொல்லியிருப்பது படத்தின் மிக பெரிய பலம். ஒரு சாதரண குடிமகனின் கோபத்தை இதை விட அழகாக இந்தியாவில் எந்த ஒரு நடிகராலும் நடித்திருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். கமல் ஒரு சகாப்தம் என்பதை மீண்டும் மீண்டும் நீருபித்து கொண்டிருக்கிறார். சற்றே பெரிய தாடியிலும் ஒரு மூக்கு கண்ணாடியிலும் அவ்வளவு பாந்தமாக இருப்பினும், கண்களின் தீர்க்கம் நமது முதுகு தண்டு ஆழம் வரை செல்கிறது. கமல் என்னும் கலைஞன் ஒரு தீர்கதரிசி. வளர்க இவன் தொண்டு.
நான் சற்றும் இளைத்தவனல்ல என்று மோகன் லாலும் பிரமிப்பை உண்டு பண்ணுகிறார். தீர்க்கமான முடிவுகள், உயர் அரசு அலுவலரான லக்ஷ்மியுடன் மோதல், IIT Drop Out ethical hackerஉடன் சில நிமிடங்கள், கதாநாயகனின் பாதுகாப்பு உரையாடல், im doing my duty என்று ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களபடுதுகிறார்.
வெடி குண்டு மிரட்டலை பற்றி முதலமைச்சரிடம் சொல்லி கொண்டிருக்கும்போது, "குண்டு வெக்கறன்னு சொல்றாங்களா" என்று கலைஞரின் சாயல் குரல் ஒலிக்கும்போது எழும் கரகோஷம் Raaj Kamal Internationalukku கிடைத்த கரகோஷம். Arif ஆக வரும் காவல்காரர், மிடுக்கான அவர் நண்பர், கமல், மோகன் லால், லக்ஷ்மி என சொல்லிக்கொள்ள 5 அல்லது 6 கதாபாத்திரங்கள், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதி, தமிழ்நாடு காவல்துறை அறை - இதை மட்டுமே வைத்துக்கொண்டு இவ்வளவு சிறப்பாக படம் வந்திருப்பதற்கு இரண்டே காரணங்கள்தான்.
1. உலகத்தரமிக்க நடிகர்கள் கமல் மற்றும் மோகன் லால்.
2. சொல்ல வந்த கருத்து : "மதம் மற்றும் தீவிரவாதம் ஒழியட்டும், மனிதம் வளரட்டும்"
ஸ்ருதி ஹாசன் படத்திற்கு இசை. முதல் படத்தில் இவ்வளவு நேர்த்தியா என அட போட வெக்கும் ரகம்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருப்பது முஸ்லிமும்மல்ல, இந்துவுமல்ல, தமிழனுமல்ல ஒரு சராசரி இந்திய குடிமகன் தான் என்று உணர அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
அழகிய தமிழ் மகன் , மாசிலாமணி, போன்ற படங்களை எடுப்பவர்களும் சரி, விளம்பரம் செய்பவர்களும் சரி இது போன்ற படங்களை பார்த்தாவது தங்கள் மனசாட்சி படி நடந்துகொள்வது மிக உத்தமம் என்றே தோன்றுகிறது.